[X] Close

உலக சுற்றுலா தினம்: விடுமுறை பயணத்தின் போது டிஜிட்டல் நச்சு எதற்கு?


world-tourism-day-special-feature

கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 26 Sep, 2018 16:05 pm
  • அ+ அ-

அலுவலகத்தில் கடின உழைப்பு, காலக்கெடு, அழுத்தம், சோர்வு என அனைத்தையும் கடந்த பின் ஒருவருக்கு ஓய்வு தேவை. இந்த ஓய்வு ஒரு சுற்றுலா பயணமாகக் கூட இருக்கலாம். இந்த ஒய்வு, புத்துணர்வுடன், மேற்கொண்டு ஆர்வமாக உழைக்க உதவும். 

உலக சுற்றுலா நாள் செப்டம்பர் 27-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, நமது பயணத்தை முடிந்தவரை பயனுள்ளதாக்க என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம். 

பயணத்தின் போது இயற்கையின் அழகை ரசிப்பது, வரலாற்றுச் சின்னங்களின் பெருமையை உணர்வது என்பதெல்லாம் முன்பு முக்கியமாய் இருந்தது. இன்றோ, செல்லுமிடமெல்லாம் செல்ஃபி, எந்த இடத்துக்குச் செல்கிறோம் என்பதைப் பற்றிய சமூக வலைதளப் பதிவு, இவற்றில் தான் கவனம் அதிகமிருக்கிறது. 

ஆனால் பயணம் என்ற அனுபவத்துக்காக பயணப்பட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது உங்களுக்காக பிரத்யேக நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி சிந்தியுங்கள். நாம் ஏன் பயணப்படுகிறோம் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். பயணப்படுவது உங்களுக்காக என்றால், சமூக வலைதளங்களில் தம்பட்டம் போடுவதற்கு அவசியமே இல்லை. 

பயணத்தை, ஆன்மாவின் ஓய்வுக்காக என எடுத்துக் கொள்ளுங்கள். மொபைல் உள்ளிட்ட சாதனங்களை சிறுது நேரம் தள்ளி வையுங்கள்.  அதற்கு பதிலாக வரைதல், கடல் பரப்பை கவனித்தல், பறவைகளை நோக்குதல், மலைகளை ரசித்தல், வாசிப்பு, யோகா என ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுங்கள். உங்களைப் பற்றி மேம்பட்ட புரிதலை இவை தரும் என்பதே நிபுணர்கள் கருத்து. 

இன்று, பயணமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பயணத்தை மக்கள் பார்க்கும் விதம் மாறியுள்ளது. புதுப்புது இடங்களைத் தேடிச் செல்ல மக்கள் தயாராக இருக்கிறார்கள். மற்ற பயணிகளுடன் கலந்து பேசி, நட்புறவாடி, அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை தெரிந்து கொள்வதிலும்  ஆர்வம் காட்டுகிறார்கள்.

தொழில்நுட்பம் தேவை தான். அவற்றை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால் சரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். பயணப்படும்போது கூகுள் மேப்ஸ், முக்கியமான அழைப்புகளை மட்டுமெ எடுத்துப் பேசுவது என தேவையான நேரத்தில் மட்டும் தொழில்நுட்பம் உங்கள் கைகளில் இருக்கட்டும். 

நம்மைச் சுற்றியிருக்கும் டிஜிட்டல் நச்சை நீக்குவதே உங்கள் விடுமுறையை நீங்கள் கொண்டாட சிறந்த வழியாகும். 

- ஏ.என்.ஐ

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close