[X] Close

கர்ப்பிணிகள் கண்காணிப்பில் சுகாதாரத் துறை அலட்சியம்: கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள், உயிரிழப்புகள் 


pregnant-women-issue

வெரோணிக்கா மேரி

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 10:45 am
  • அ+ அ-

கிராமங்களில் கர்ப்பிணிகள் கண்காணிப்பில் சுகாதாரத் துறை அலட்சியமாக இருப்பதாலேயே கருக்கலைப்புகள், சிசுக் கொலை கள் தொடருவதாக புகார் எழுந் துள்ளது.

உசிலம்பட்டியில் கருக் கலைப் புச் செய்ய முயன்ற கர்ப்பிணி ராமுத் தாய் உயிரி ழந்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் திரைமறைவில் நடப்பது தெரிய வந்துள்ளது. கருக்கலைப்புகளுக்கு ஸ்கேன் சென்டர்களில் கருவின் பாலினத் தைத் தெரிவிப்பது கார ணமாகக் கூறப்படுகிறது.

முறைகேடாகச் செயல்படும் தனியார் ஸ்கேன் சென்டர்களை கண்டறிந்து உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் படைத்த நிர்வாகமாக சுகாதாரத் துறையின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் செயல் படுகிறது. மாவட்டந்தோறும் துணை இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த ஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க வேண்டும். ஆனால், இவர்களை கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய சுகாதாரத் திட்டத்தின் படி கிராமங்களில் கர்ப்பிணி கள் கருத்தரித்த 3 மாதம் முதலே பிரசவம் வரை கிராமச் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் கண்காணிப்பில் வந்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் உடல்நிலை, கருவில் இருக்கும் சிசுவின் எடை, இதயத் துடிப்பு, வளர்ச்சி ஆகிய விவரங்களையும் செவிலியர்கள் கண்காணித்து இருக்க வேண்டும். ஆனால், உசிலம்பட்டியில் உயிரிழந்த ராமுத்தாய், செவிலியர்கள் கண்காணிப்பில் வரவே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதனால், ராமுத்தாய் கருவைக் கலைக்க தனியார் செவிலியர் உதவியை நாடி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராமுத்தாய்க்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. 4-வதாக ஆண் குழந்தைக்காக அவர் கர்ப்பமாகியுள்ளார். ஆண் குழந்தை இல்லாதபட்சத்தில் அதைக் கலைக்க வேண்டும் என்ற திட்டத்திலே இருந்துள்ளனர். அதனால், ராமுத்தாய் கர்ப்பமடை ந்ததைச் செவிலியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார் என்றார்.

மக்கள் கண்காணிப்பகம் அமை ப்பின் பெண்கள், குழந்தைகள் நல ஆர்வலர் வெரோணிக்கா மேரி கூறுகையில், கர்ப்பிணிகளுக்கு ரத்தக் கொதிப்பு, இதய நோய், உள்ளிட்ட 25 வகையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், கர்ப்பிணிகள் பிரசவகால உத்தேச தேதிக்கு முன்பாகவே அந்தந்தப் பாதிப்புகளுக்கு ஏற்ப 2 முதல் 3 வாரங்களுக்கு முன் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டும். தாலுகா மருத்துவ மனையில் சீமாங் திட்டத்தில் பிரசவ தேதியிலிருந்து உடல் பாதிப்புக்கு ஏற்றார்போல் 3 அல்லது 7 நாட்களுக்கு முன்பாகவே உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்.

கர்ப்பிணிகளை கண்காணிக் காததே ராமுத்தாய் இறக்கக் கார ணம். அ்ப்பெண்ணின் வயிற்றில் இருந்தது ஆண் குழந்தைதான் என பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஆனால், 4-வது குழந்தையும் பெண் குழந்தை யாகப் பிறந்துவிடுமோ என்ற அச்சத்திலே கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத் துறை யினர் கண்காணித்திருந்தால் கருக்கலைப் பை தடுத்திருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close