[X] Close

மதுரை மாநகரில் அதிகரித்து வரும் மொபைல்போன் வழிப்பறியை தடுக்க மீண்டும் செயல்படுமா தனிப்படை?


mobile-stolen-issue

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 10:38 am
  • அ+ அ-

மதுரை நகரில் அதிகரிக்கும் செல்போன் வழிப்பறியை தடுக்க, தனிப்படையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மதுரை நகரில் சமீப காலமாக ஸ்மார்ட் போன் வழிப்பறி சம்ப வங்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் 2 அல்லது 3 இடங்களில் இதுபோன்ற வழிப்பறிகள் நடக்கின்றன. விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை பெற்றோர் வாங்கித் தர மறுக்கும் சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர் களில் சிலரே இத்தகைய வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் தெருக்களில் மாலை, இரவு நேரங்களில் தனியாக போன் பேசிக்கொண்டு செல் லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு 7 மணியளவில் அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியில் வீரவாஞ்சிநாதன் தெருவில், பெண் ஒருவர், தனது குழந்தையின் கையில் ஸ்மார்ட் போனை கொடுத்து விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த 3 பேர், அந்த ஸ்மார்ட் போனை பறித்துக் கொண்டு ஓடினர். அவர்களை துரத்திச் சென்ற பொதுமக்களிடம், ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை தாக்கிய பொதுமக்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் என தெரியவந்தது. சிக்கிய மாணவரின் பெற்றோர், போலீஸாரிடம் கண்ணீர்மல்க தங்கள் மகனை மன்னித்து விடுவிக்கும்படி கெஞ்சினர். இதையடுத்து, அந்த மாணவரை எச்சரித்த போலீஸார், தப்பியோடிய மற்ற இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் ஸ்மார்ட் போன் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்தபோது, அதை கண் காணித்து தடுக்க தனிப் படை அமைக்கப்பட்டது. இப்பி ரிவைச் சேர்ந்த போலீஸார், மொபைல்போன் சர்வீஸ் மையங்கள், பஜார்களில் உள் ள மொபைல்போன் கடைக் காரர்களை சந்தித்து திருட்டு மொபைல்போன்களை வாங்கக் கூடாது என எச்சரித்தனர். மேலும், பழைய மொபைல்போன்களை யாராவது விற்க வந்தால், அவர்களிடம் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனால், மொபைல்போன்களை திருடியவர்கள், அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற தொடர் நடவடிக் கைகளால், மொபைல்போன் வழிப்பறி சம்பவங்கள் குறையத் தொடங்கின. இந்நிலையில், தனிப்படை கலைக்கப் பட்டதையடுத்து, தற்போது மீண்டும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘மொபைல்போன் வழிப்பறியை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையின் நடவடிக்கையால் திருட்டுப்போன 200-க்கும் மேற்பட்ட போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேசமயம், அது திருட்டு மொபைல்போன் எனத் தெரி யாமல் கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்த கிராமப்புற அப்பாவி பெண்களும், கூலித் தொழிலாளிகளும் போலீஸ் விசாரணையில் சிக்கினர். பின்னர், சில நடைமுறை சிக்கலால் தனிப் படை கலைக்கப்பட்டது என்றனர்.

வழிப்பறி சம்பவங்களில் பெரும்பாலும் ஏற்கெனவே திருட்டுக் குற்றங்களில் தொடர்பு டையவர்களே ஈடுபடுவார்கள் என்ற நிலை மாறி, ஆடம்பர ஸ்மார்ட் போனுக்கு ஆசைப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட வழிப்பறி திருடர்களாக மாறிவரும் சூழ்நிலை ஆபத்தானது. இதைத் தடுக்க மீண்டும் தனிப்படையை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close