[X] Close

புதுக்கோட்டை உழவர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப் பைகளுக்கு மாறிய பொதுமக்கள்


peoples-changed-to-dress-bag-at-pudhukottai

புதுக்கோட்டை உழவர் சந்தையில் இருந்து துணிப் பைகளில் காய்கறிகளை வாங்கி செல்வோர்.

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 09:59 am
  • அ+ அ-

புதுக்கோட்டை உழவர் சந்தை யில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இல்லாததால் பொதுமக்கள் துணிப் பைகளுக்கு மாறியுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை உரிய விலைக்கு நேரடியாக விற்பனை செய்து பயன்பெறுவதற்காக கடந்த 1999-ல் தமிழகமெங்கும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.

இங்கு புதிய, தரமான காய்கறிகளை சீரான விலைக்கு விவசாயிகள் விற்பனை செய் வதால், வாடிக்கையாளர்கள் அதிகமானோர் உழவர் சந்தை களில் காய்கறிகளை வாங்கி பயன் பெறுகின்றனர்.

புதுக்கோட்டையில் உள்ள உழவர் சந்தையில் 120 கடைகள் உள்ளன. அன்றாட தேவைக்கான காய்கறிகளை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர்.

இங்கு அனைத்துக் காய்கறி களும் பிளாஸ்டிக் கவர்களில் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 15 முதல் புதுக்கோட்டை ஆட்சியர் சு.கணேஷ் தடை விதித்தார்.

இந்த உத்தரவு மற்ற இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதோ இல்லையோ, உழவர் சந்தையில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை வேளாண் வணி கம் மற்றும் நகராட்சி நிர்வாகம் கண்டிப் புடன் செயல்படுத்தி வருவதால், கடந்த இரு மாதங்களாக உழவர் சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

மாறாக, நுகர்வோரே துணி பைகளை கொண்டுவந்து காய் கறிகளை வாங்கிச் செல்கின்றனர். பை ஏதும் இல்லாமல் வருவோர் துணிப் பைகளை விலைக்கு வாங்கி அதில் காய்கறிகளை கொண்டு செல்கின்றனர்.

மேலும், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதை கைவிட்டு எவர்சில்வர் டம்ளர்களை பயன் படுத்தி வருகின்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியபோது, “இங்கு நாளொன் றுக்கு ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளால் நில வளம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்ததையடுத்து, நாங்கள் இதை பயன்படுத்துவதில்லை.

அதே சமயம், எளிதில் மக்கக்கூடிய துணி மற்றும் பேப்பர் பைகளை குறைந்த விலையில் இங்கு விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close