[X] Close

தொடர் முயற்சிக்கு வெற்றி மகிழ்ச்சியில் சலவைத் தொழிலாளி


dress-cleaner-becomes-happy

கடலூர் ஆட்சியரிடம் இருந்து இஸ்திரி பெட்டி பெறும் முத்துசாமி.

  • kamadenu
  • Posted: 25 Sep, 2018 09:56 am
  • அ+ அ-

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் கீழ்குறிச்சியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்துசாமி(35).மாற்றுத் திறனாளியான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஏழ்மையான நிலையில் தனது தாயார் பஞ்சவர்ணத்துக்கு உதவியாக சலவைத் தொழில் செய்துவந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தாயார் இறந்துவிட, அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் அவரது சலவைப் பெட்டியும் பழதாகிவிட, புதிய பெட்டி வாங்க போதிய வசதியில்லாத காரணத்தால், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சலவைப் பெட்டிக் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து 4 முறை மனு அளித்த நிலையிலும், அவருக்கு சலவைப் பெட்டிக் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த முத்துசாமி,விரக்தியடைந்த நிலையில் நேற்று மீண்டும் மனுவுடன் ஆட்சியர் அலுவலக குறைக்கேட்புக் கூட்ட அரங்கிற்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து, தனது நிலையை விளக்கியுள்ளார். அவரது நிலையை உணர்ந்த ஆட்சியர் அன்புச்செல்வன், உடனடியாக சலவைப் பெட்டியை வழங்கி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் மகிழ்ச்சியைடந்த முத்துசாமி, சந்தோஷத்துடன் வீடு திரும்பினார்.

இது தொடர்பாக முத்துசாமியை கேட்டபோது, 4 ஆட்சியர்களை சந்தித்து மனு கொடுத்தேன். கடைசியாக இருந்த தண்டபாணி ஆட்சியரிடம் தான் கொடுக்கவில்லை. இந்த நிலையில் விரக்தியடைந்து கடைசியாக ஒருமுறை கொடுப்போம் என்ற நிலையில் தான் இங்கு வந்தேன். ஆட்சியர் எனது மனுவைப் பார்த்த மறுகனமே இஸ்திரிப் பெட்டியை வழங்கி என்னை இன்பத்தில் ஆழ்த்திவிட்டார் என்றார் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close