[X] Close

மறவர் சமூகத்தினர் அனைவருக்கும் ஓபிசி சான்றிதழ்: மத்திய ஓபிசி ஆணையத்தில் பாஜக கோரிக்கை


maravar-communtiy

ஆர்.ஸ்ரீனிவாசன்

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 15:39 pm
  • அ+ அ-

தென் மாவட்ட மறவர் சமூகத்தி னருக்கு ஓபிசி சான்றிதழ் அளிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன் அளித்த மனுவுக்கு 15 நாட்களில் பதில் தருமாறு அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய ஓபிசி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பாஜக மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன். இவர் டெல்லியில் உள்ள மத்திய ஓபிசி (மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம்) ஆணையத்திடம் மறவர் சீரமைப்புத் துறை அமைக்கவும், தென் மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து மறவர் சமூகத்தினருக்கும் டிஎன்சி (ஓபிசி) சான்றிதழ் அளிக்கவும் கடிதம் வழங்கி வலியுறுத்தினார்.

இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறியது: 1970- ல் சட்டநாதன் கமிஷன் பரிந்துரைப்படி, மறவர் சீரமைப்புத் துறை அமைக்க வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தை ஆண்ட அரசுகள் இதுவரை அதை அமைக்கவில்லை. 1985- ல் அமைக்கப்பட்ட அம்பா சங்கர் கமிஷன் அறிக்கையில் மறவர் சமுதாயம் சமூக - பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது. மறவர் சமூக சீர்திருத்த துறையை அமைத்தால், இந்த சமூகம் மேலும் முன்னேற்றம் அடையும்.

மதுரை மாவட்டம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் என அடுத் தடுத்து பிரிக்கப்பட்டது. ராம நாதபுரம் தனி மாவட்டமாக பிரிக்கப் பட்டாலும், பல ஆண்டு களாக மதுரையில்தான் ஆட்சியர் அலு வலகம் செயல்பட்டது. இத னால் மதுரைக்கு குடிபெயர்வோர் எண் ணிக்கை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படி வந்த மூதாதையர்களிடம் பழைய ஜாதிச் சான்றிதழ் இருக்க வாய்ப்பில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறவர்களுக்கு மட்டும் ஓபிசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் 9 தென் மாவட்டங்களிலும் பரவலாக வாழ்கின்றனர். பாரபட்சம் பார்க்காமல் மறவர் சமூகத்தினர் அனைவருக்கும் ஓபிசி (டிஎன்சி) சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இதைத்தான், மத்திய அரசின் பாலகிருஷ்ண ரெங்கி கமிஷனும் வலியுறுத்தி உள்ளது. ஓபிசி ஆணையத்தின் பொறுப்பாளர் முருகன் எங்கள் கோரிக்கையை பரிசீலித்தார். இதுகுறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி அரசின் தலைமைச் செயலாளருக்கு ஓபிசி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வலையர் சமூகத்துக்கு சீரமைப்புத்துறை

சட்டநாதன் கமிஷன் வலையர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக வலையர் சீரமைப்பு துறை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தும் அது நடக்கவில்லை. உடனே இந்த சமூகத்தினருக்கு சீரமைப்புத் துறை அமைக்க வேண்டும் என ஸ்ரீனிவாசன் மற்றொரு கோரிக்கை வைத்தார். இது குறித்தும் 15 நாளில் பதில் அளிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close