[X] Close

கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 தொகுதி பெயர்களை கூறி அசத்திய 2-ம் வகுப்பு மாணவி


super-work-by-2nd-class-girl

கோவில்பட்டியில் நடந்த மகிழ்வோர் மன்ற கூட்டத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகள் பெயரையும் வரிசையாக கூறிய 2-ம் வகுப்பு மாணவி மவுனிகாஸ்ரீ

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 12:59 pm
  • அ+ அ-

கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 சட்டப்பேரவை தொகுதி பெயர்களை கூறி 2-ம் வகுப்பு மாணவி அசத்தினார்.

கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றத்தின் 33-வது மாதாந்திர கூட்டம் நடந்தது. பேராசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஆழ்வார்சாமி, பசுவந்தனை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நாயகம் முன்னிலை வகித்தனர். மன்ற காப்பாளர் செல்வின் வரவேற்றார். மன்ற காப்பாளர் துரைராஜ் அறிக்கை வாசித்தார்.

விழாவில் கலந்துகொண்ட இலக்குமி ஆலை தொடக்கப்பள்ளி (மேற்கு) 2-ம் வகுப்பு மாணவி மவுனிகாஸ்ரீ 4 நிமிடங்களில் 234 சட்டப்பேரவை தொகுதிகளின் பெயர்களை கூறி அசத்தினர்.

மாணவி மவுனிகாஸ்ரீ, நல்லாசிரியர் விருது பெற்ற நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு பள்ளி தலைமை ஆசிரியை சண்முகவடிவு, இளையரசனேந்தல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், காமநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் நடராஜன் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

“மகிழ்ச்சிக்கான வாழ்க்கை, திருமணத்துக்கு முன்பே - திருமணத்துக்கு பின்பே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மகிழ்வோர் மன்ற இயக்குநர் ஜான்கணேஷ், ஆலோசகர் ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close