[X] Close

”முதன்முதலில் இந்திய தேசிய கீதத்தை கேட்டபோது எனக்கு புல்லரித்தது” - பாக். ரசிகர் நெகிழ்ச்சி


pakistan-fan-interview

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 11:44 am
  • அ+ அ-

துபாயில் நடந்துவரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தனது தோளில் பாகிஸ்தான் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு, இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று, தேசிய கீதத்தை பாடியதுதான் சமூக வலைதளங்களில் தற்போதைய ட்ரெண்டிங். 

நாடு முழுவதும் வைரலான அந்த வீடியோவில் தேசிய கீதத்தை பாடிய அந்த ரசிகரின் பெயர் ஆதில் தாஜ். 

இந்த சமபவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தாஜ், ”ஒருமுறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசும்போது இந்தியா நம்மை நோக்கி ஒரு அடி முன்வைத்தால் நாம் அவர்களை நோக்கி இரண்டு அடிகள் முன்வைப்போம் என்று கூறியிருந்தார். இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எனக்கு அந்த வார்த்தைகள் ஞாபகம் வந்தன. அமைதியை நோக்கிய பயணத்தில் இது என்னாலான சிறிய பங்கு இது.” என்று கூறியுள்ளார்.

மேலும், ”முதன்முதலில் இந்திய தேசிய கீதத்தை ஒரு ஹிந்தி படத்தில் கேட்டபோது எனக்கு புல்லரித்தது” என்றும் தாஜ் கூறினார்.

மேலும் பேசிய அவர், “விளையாட்டுதான் நாடுகளை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து போட்டிகள் நடக்க வேண்டும். என்னை பொருத்தவரை அதுதான் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close