[X] Close

சுதந்திர போராட்டத்தின் பிதாமகன் பாரதி: சி.மகேந்திரன் புகழாரம்


mahendran-speech-at-thirunelveli

எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழாவில் மாணவ, மாணவியர் பாரதி மற்றும் தேச தலைவர்கள் போல் வேடமணிந்து கலந்து கொண்டனர்.

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 11:27 am
  • அ+ அ-

சுதந்திர போராட்டத்தின் பிதாமகன் பாரதி என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் மற்றும் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் 57-வது ஆண்டு மகாகவி பாரதி விழா எட்ட யபுரத்தில், பாரதி நினைவு மணி மண்டப வளாகத்தில் நடந்தது.

பாரதி முற்போக்கு வாலிபர் சங்க தலைவர் சோ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொரு ளாளர் பா.ரமணி, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் தொடக்கமாக தமிழ கம், கேரளம், பஞ்சாப், பிஹார், டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள், கவி ஞர்கள், பாரதி அன்பர்கள், பாரதி வேடமணிந்த பள்ளி மாணவ, மாணவியர் ஆகியோர் பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தேவராட்டம், கும்மியாட்டத்துடன் ஊர்வலம் தொடங்கி, பாரதி நினைவு மணிமண்டப வளாகத்தில் நிறைவடைந்தது.

அங்கு பாரதியின் முழு உருவச்சி லைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இளசை மணியன் தொகுத்து எழுதிய ‘ரஷ்ய புரட்சியும் இந்தியாவும்’ என்ற புத்தம் வெளியிடப்பட்டது.

இந்திய ரஷ்யா கலாச்சார நட்புறவு கழக தமிழக பொதுச் செய லாளர் ராதாகிருஷ்ணன் புத்த கத்தை வெளியிட, இந்திய ரஷ்யா கலாச்சார நட்புறவு கழக தேசிய குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

மாற்றம் நிகழவில்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: உலகம் போற்றக் கூடிய கவிஞர் பாரதி. அந்த கவிஞரின் புகழை அழிப்பதற்கும், வேறு ஒரு உருவ மாக மாற்ற முயற்சித்த போதும், அதை முறியடித்து மக்கள் கவிஞராக பாரதியை காண்பித்த பெருமை புரட்சியாளர் ஜீவாவுக்கு உண்டு. அந்த பெருமையை நிலை நாட்டிய இடம் எட்டயபுரம். பாரதி எப்படி வாழ்வில் போராடி னாரோ, அதேபோல் தான் பாரதி யின் கருத்துக்களை சுமந்து செல்கிறவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதைப் போன்ற ஒரு நிகழ்வு 110 ஆண்டுகளுக்கு முன் 1908-ம் ஆண்டும் தூத்துக்குடியில் நிகழ்ந்தது. பிரிட்டிஷ்காரர் ஹார்வி யால் நடத்தப்பட்ட கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் போது, முன்னின்று நடத்திய வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.

அப்போதும் காவல்துறையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். இப்போது நம்மை நாமே ஆளுகிறோம். ஆனா லும் ஆட்சியாளர்கள் அணுகு முறையில், காவல்துறையின் நிர்வா கத்தில் எந்த மாற்றமும் நிகழ வில்லை. காந்தி போன்றவர்கள் சுதந்திர வேட்கையை மூட்டிய வர்கள் என்றால், அந்த தலை முறைக்கு எல்லாம் பிதாமகனாக இருந்தவர் பாரதி. இவ்வாறு அவர் பேசினார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலர் ராஜேந்திர ராஜன், தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற தலைவர் சி. சொக்கலிங்கம், பஞ்சாபி சாகித்ய அகாடமி தலைவர் சுத்தேவ் சிங், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close