[X] Close

குறும்படத்தில் நடித்திருக்கும் விஜய் மகன்: வைரலாகும் டீசர்


vijay-son-acted-in-junction-short-film

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 11:05 am
  • அ+ அ-

'ஜங்சன்' என்ற குறும்படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்திருக்கிறார். அக்குறும்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

’வேட்டைக்காரன்’ படத்தில் ’நான் அடிச்ச தாங்கமாட்ட’ பாடலில் விஜய்யுடன் நடனமாடினார் அவரது மகன் சஞ்சய். அதனைத் தொடர்ந்து ‘தெறி’ படத்தில் அவரது மகள் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் வருவார். மேலும், விஜய்யின் குழந்தைகள் புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

தற்போது முதன்முறையாக விஜய்யின் மகன் சஞ்சய் ‘ஜங்சன்’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இக்குறும்படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் முழுமையான குறும்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறும்படத்தில் நடித்திருப்பதால், விரைவில் திரையுலகிற்கும் நாயகனாக அறிமுகமாவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close