[X] Close

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘நர்சரி’ தொழில்: நாற்றுப் பண்ணைகளை ஊக்குவிக்க மானியம் வழங்க வலியுறுத்தல்


nursery-business

  • kamadenu
  • Posted: 23 Sep, 2018 18:28 pm
  • அ+ அ-

 

எஸ்.கே.ரமேஷ்

ராயக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நாற்றுகளை வளர்த்து விற்பனை செய்யும் நர்சரிகள், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகின்றன. இங்கு பசுமைக்குடில் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, மலர் நாற்றுகள், ரயில் மூலம் வடமாநில விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் நிலவும் சிதோஷ்ணநிலை, மண் வளத்தால் விவசாயிகள் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், மலர்கள், ஓசூர், ராயக்கோட்டை சந்தை மூலம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டைய மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இப்பகுதியில் விளைவிக்கப் படும் தரமான காய்கறிகள், மலர்களுக்கான நாற்றுகள், பசுமைக்குடில் மூலம் உற்பத்தி செய்ய ராயக்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட நர்சரி (நாற்றங்கால்) பண்ணைகளை இப்பகுதி விவசாயிகள் அமைத்துள்ளனர்.

இங்கிருந்து தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கும், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களுக்கும் நாற்றுகளை பேருந்துகள், லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுகுறித்து நாற்று உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, ‘‘நிலத் தில் 50 சென்ட் நிலத் தில் மண்ணைப் பதப் படுத்தி, கல் கம்பம் நட்டு பசுமைக்குடில் அமைக்க ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. இங்கு சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றப்படுகிறோம். மேலும், அட்டைகளில் தென்னை நார் நிரப்பப்பட்டு, அவற்றில் விதைகள் ஊன்றப்படும். ஒவ்வொரு அட்டையிலும் 98 நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும். விதைகளில் துளிர் விடும் வரை தண்ணீா் தெளிக்கப்பட்டு, ஈரப்பதத்துடன் நாற்றுகள் வைக்கப்படும்.

காய்கறிகளைப் பொருத்தவரை, தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், கத்தரி, மிளகாய் நாற்றுகளும், சாமந்தி பூக்களில் வெள்ளை, மஞ்சள் மேரிகோல்டு, ரோஜா உள்ளிட்ட நாற்றுகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அட்டைகளில் விதைகள் வைக்கப்பட்ட 25 நாட்களில் நாற்று தயாராகிவிடும். இந்த நாற்றுக்கள் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வடமாநில விவசாயிகளுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான நாற்றுகளை ஆர்டர் செய்து, வங்கியின் மூலம் பணம் செலுத்திவிடுகின்றனர்.

இங்குள்ள நாற்றுப் பண்ணைகளில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் ராயக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் களையெடுத்தல், பதியம் போடுதல், நீர்பாய்ச்சுதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.220 வழங்கப்படுகிறது.

நாற்றுகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனையாகா விட்டால், முழுமையாக வீணாகிவிடும். ராயக்கோட்டை பகுதியில் நாற்றுப் பண்ணைகள்தான் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. பசுமைக்குடில் அமைக்க மானியம், உற்பத்திக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை அரசு வழங்கி நாற்றுப் பண்ணைத் தொழிலை முன்னேற்றமடைய வைத்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும், என்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close