[X] Close

பெட்ரோல் விலை உயர்வால் மாறிய காலச்சக்கரம்: சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்லும் இளைஞர்கள்


petrol-diesel-price-hike

சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்லும் கே.குட்டிமுத்துக்குமார் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

  • kamadenu
  • Posted: 21 Sep, 2018 12:44 pm
  • அ+ அ-

 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பெட்ரோல் விலை உயர்வால் மதுரையில் நூற்றுக்கும் மேற் பட்ட இளைஞர்கள் தற்போது அலுவலகங்களுக்கு தினமும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்துள் ளனர்.

தங்கம் விலை போல் பெட் ரோல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆண்டிற்கு ஓரிரு முறை பெட்ரோல் விலை உயர்ந்த காலம்போய் தற்போது நாள்தோறும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ தாண்டி ரூ.90-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்படியே சென்றால் ரூ.100-ஐ தொட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால், நடுத்தர மக்களால் இரு சக்கர மோட்டார் வாகனங்களை அன்றாட வீட்டு உபயோகத்திற்கும், அலுவலக வேலைகளுக்கும் முன்புபோல் தாராளமாக பயன்படுத்த முடியவி ல்லை. அதனால், தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற மாநகர மக்கள் மெல்ல மெல்ல இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு பதிலாக சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மதுரையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலு வலகங்களுக்கு சைக்கிளில் செல்லத் தொடங்கிவிட்டனர். இவர்கள் தினமும் நகரச்சாலை களில் சைக்கிளில் பயணிப்பது பொதுமக்களை திரும்பிப் பார்க்க வைத்திருப்பதோடு மற்றவர் களையும் கவுரவத்தைவிட்டு சைக்கிளில் செல்ல தூண்டுதலாக அமைந்துள்ளது. வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் வாங்க மார்க்கெட் செல்வது, குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட அன்றாட வேலைகளுக்கு சைக்கிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தினமும் வீட்டிலி ருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று வரும் மதுரை பொன்மேனியை சேர்ந்த கே.குட்டிமுத்துக்குமார் கூறிய தாவது: சைக்கிளை பயன்ப டுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. புத்துணர்ச்சியுடன் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், பெட்ரோல் விலை உயர்வைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்கின்றனர். குறிப்பாக எச்சிஎல் கம்பெனியில் மட்டுமே 25 பேர் தற்போது சைக்கிளில் வருகின்றனர். அந்த அலுவலகத்தில் சைக் கிள் நிறுத்துவதற்கு தனி இடமே ஒதுக்கி உள்ளனர். அதேபோல், மருத்துவர்கள், அலுவலக மேலா ளர்கள் போன்றோர் கூட சைக்கிளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைத்து சைக்கிளிங் கிளப் வைத்துள்ளோம். கல்லூரி மாணவர்கள்கூட, ஆடம்பர பைக்குகளை தவிர்த் துவிட்டு சைக்கிளில் செல்லத் தொடங்கியுள்ளனர்.

முன்பு உடல் ஆரோக்கியத்தி ற்காகவும், சுற்றுச்சூழல் பாது காப்புக்காகவும் சைக்கிளை ஓட்டுவதில் சிலர் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது பெட்ரோல் விலை உயர்வால் பலர் சைக்கிளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு மட்டும் சென்று வருவோருக்கு சைக்கிளை பயன்படுத்துவது எளிது. அதேநே ரத்தில் மார்க்கெட்டிங் பணியில் உள்ளோருக்கு சிரமம் உள்ளது. ஏராளமான வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டியிருப்பதால், நகர்ப்புற நெரிசல் மிகுந்த சாலைகளில் சைக்கிளில் செல்வது அவர்களுக்கு சாத்தியமில்லை. எனவே, சில ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்று, மாநகரின் முக்கிய சாலைகளில் சைக்கிளுக்கு என்றே தனிப்பாதை ஏற்படுத்தித் தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close