பார்வையற்றோருக்கு நவீன கருவி: கோவில்பட்டி நேஷனல் கல்லூரி மாணவியர் கண்டுபிடிப்பு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவியர் பார்வையற்றோருக்கான நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
பார்வையற்றோருக்கான நவீன கருவியை, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின்படி 285 மில்லியன் பார்வையற்றோர் உலகெங்கும் உள்ளனர். அதில் 39 மில்லியன் மக்கள் முற்றிலும் பார்வை இழந்தோர். இவர்களுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் கருவி ஒன்றை நேஷனல் பொறியியல் கல்லூரி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் துறையை சேர்ந்த மாணவிகள் திவ்யலட்சுமி, அருணாதேவி, பிரியாமோகனவள்ளி ஆகியோர் வடிவமைத்து உள்ளனர்.
இக்கருவி தன் முன் நிற்கும் நபர் யார் என்பதை பார்வையற்றோருக்கு அறிவிக்கும். இக்கருவி மூலம் பொது இடங்களுக்கு செல்லும் பார்வையற்றோர், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளமுடியும். இதில் உட்பொதிதல் மற்றும் இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேசியசுய தொழில் முனைவோர் திட்டத்தின் நிதி உதவியில் வடிவமைக்கப்பட்டது.
கருவியை வடிவமைத்த மாணவிகளை, கல்லூரி நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், இயக்குநர் கே.என்.கே.எஸ்.கே.சொக்கலிங்கம், முதல்வர் எஸ்.சண்முகவேல் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசியர்கள் பாராட்டினர்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு எப்படிப்பட்டது? - மு.தம்பிதுரை விளக்கம்
- ஹாட்லீக்ஸ் : கருப்பசாமிக்கு கிடா வெட்டிய குமாரு!
- ஒவ்வொருவரும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்: திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவது திமுகவுக்கு மிகவும் முக்கியம் - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு அறிவுரை
- இளம் வயதில் அரசியலுக்கு வரவேண்டும்: இளைஞர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு