[X] Close

தமிழகத்திலேயே முதல் முறையாக  மதுரை ஆவின் பாலகத்தில் நூலகம் தொடக்கம்: வாடிக்கையாளரை வாசிப்பாளராக்க புது முயற்சி


madurai-aavin-milk-booth

மதுரை கே.கே.நகரில் உள்ள ஆவின் பாலகம் | ஆவின் பாலகத்தில் உள்ள நூலகத்தில் புத்தகம் வாசிக்கும் மாணவி.

  • kamadenu
  • Posted: 20 Sep, 2018 10:02 am
  • அ+ அ-

 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை ஆவின் பாலகத்தில் பால் பொருட்கள் வாங்கவும், சாப்பிடவும் வரும் வாடிக்கை யாளர்கள், அவர்களுடைய குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த தமிழகத்திலேயே முதல் முறையாக நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

பால் பாக்கெட்டுகள் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பால் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக 2016-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மதுரை கே.கே.நகரில் நவீன ஆவின் பாலகம் (Hi tech Aavin Parlour) திறந்து வைத்தார். இந்த ஆவின் பாலகத்தில் குழந்தைகளையும், வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதில், நிழற்குடைகள் அமைத்து அதற்குக் கீழே வாடிக்கையாளர்கள் இயல் பாக அமர்ந்து சாப்பிடுவதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

குழந்தைகள் சருக்கி விளையாடுவதற்கான உபகர ணங்கள் உள்ளன. அலங்காரச் செடிகள், கொடிகள், மரங்கள் என்று பசுமையாகக் காணப்படும் இந்தப் பூங்கா ஆவின் பாலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், அவர்களுடைய குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த நவீன ஆவின் பாலகத்தில் குழந்தைகளையும், வாடிக் கையாளர்களையும் வாசிப்பாளர் களாக்கும் வகையில் அவர் களுடைய அறிவுத்திறனை மேம்படுத்த நூலகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் நீதிக்கதைகள், திருக்குறள், மதுரை யின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றிய புத்தகங்கள், குழந்தைகளுடைய தமிழ் உச்சரிப்பை அழகாக்க தமிழ் வார்த்தைகள் அடங்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக சிறிய அளவில் இந்த நூலகம் தொடங்கப் பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், குழந்தைகளுடைய வரவேற்பைப் பொருத்து இந்த நூலகத்தைப் பெரியளவில் உருவாக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஆவின் பாலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், அவர்களுடன் வரும் குழந்தைகள் இங்குள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாங்கி ஆர்வமாகப் படிக்கின்றனர்.

இதுகுறித்து ஆவின் பாலகப் பொதுமேலாளர் ஜெய கூறுகையில், ‘‘தமிழகத்திலேயே முதல் முறையாக ஆவின் பாலகத்தில் நூலகம் தொடங் குவது இதுவே முதல் முறை. ஆவின் பாலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களையும், தாங்கள் எழுதிய புத்தகங்களையும் பொது மக்கள் படிப்பதற்கு நன்கெ ாடையாக வழங்கலாம். நாங்களும் புதிய புத்தகங்களை வாங்கி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

மாதந்தோறும் ஆவின் பாலகத்திற்கு வரும் வாடிக்கை யாளர்களையும், நூலக வாசகர் வட்டத்தையும் இணைத்துக் கூட்டம் போடுகிறோம். மற்ற துறைகளுடன் சேர்ந்து பல்வேறு விளக்கக் கண்காட்சியும் நடத்துகிறோம். அப்போது புத்தக வாசிப்பையும், ஆவின் பொருட்களுடைய விற்பனையை அதிகப்படுத்தவும் இரட்டை முயற்சிக்காக இந்த நூலகத்தைத் தொடங்கி உள்ளோம். நூலகம் தொடங்குவதால் அங்கு படிக்க வருவோரையும் ஆவின் பொருட்களை வாங்க வைப் பதோடு வாடிக்கையாளர்களைத் தேடிச் செல்லாமல் அவர்களை எங்கள் ஆவின் பாலகத்திற்கு தேடி வருவதற்கான முயற்சியாக இதை மேற்கொண்டுள்ளோம், ’’ என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close