அறிவுசார் தலைமுறையை உருவாக்க அச்சாரம்: கல்லூரியில் வாசகர் வட்டம்

தமிழகத்தில் மாவட்ட தலைமை நூலகங்கள், நகர்ப்புற பொது நூல கங்கள், ஊர்ப்புற நூலகங்களில் வாசகர் வட்டம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நூலக மேம்பாட்டுக்காக இந்த அமைப்பினர் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
ஆனால், கல்லூரியிலேயே வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி, அதை மாணவ, மாணவியரே பொறுப்பேற்று நடத்தும் புதுமை, பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மாதந்தோறும் அரங்கேறுகிறது.
வாசிப்பு-திறனாய்வு
தமிழகத்தில் பல கல்லூரிகளில் பிரமிக்கத்தக்க அளவுக்கு நூலக கட்டிடங்களும், புத்தகங்களும் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற மாணவர் வாசகர் வட்டம் அமைப்பு இருப்பதில்லை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர் வாசகர் வட்டம் அப்படியென்னதான் செய்கிறது?.
இக் கல்லூரி தமிழ்த்துறையும், மாணவர் பேரவையும் இணைந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த நூல்களை மாணவர்கள் வாசிக்க வும், நூல் திறனாய்வுகளை மேற்கொள்ளவும், இணைய நூல்களை வாசிக்கவும், அவற்றை திறனாய்வு செய்யவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டன.
இதற்காக கடந்த 2016-ம் ஆண்டில் உருவானது தான் மாணவர் வாசகர் வட்டம். கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ச.மகாதேவனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு சக தமிழ் பேராசிரியர்கள் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கல்லூரி மாணவர் பேரவை, தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை நூல் வாசிப்பு மற்றும் நூல்கள் திறனாய்வு நிகழ்வை கல்லூரி உரையரங்கில் நடத்துகின்றன.
நூல் வாசிப்பில் ஆர்வமுள்ள தமிழ்த்துறை மாணவ, மாணவியர் மட்டுமின்றி பிற துறை மாணவ, மாணவியரும் மாதந்தோறும் வாசகர் வட்ட கூட்டத்துக்கு தவறா மல் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 நூல்களை வாசிப்பிற்காகவும், விமர்சனத்துக்காகவும், நாளி தழ்களில் இடம்பெறும் நூல் அறிமுகப்பகுதியில் இருந்து மாண வர்களே தேர்வு செய்கின்றனர்.
அந்த நூல்களை மாண வர்களுக்கு பெற்றுத் தருவதில் பேராசிரியர்கள் உதவி செய்கி றார்கள். நூல்களை எவ்வாறு திறனாய்வு செய்வது என்று மாண வர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
வாசகர்கள்-ஆர்வலர்கள்
இதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர் மகாதேவன் கூறும்போது, “2 மணி நேரத்துக்கு குறையாமல் நடைபெறும் இந்த நூல் திறனாய்வு நிகழ்வில் மாணவர்களே வாசகர்களாக, நூல் ஆர்வலர்களாக பங்கேற்கிறார்கள். சமகால தமிழ் சூழலில் எழுதப்படும் சிறந்த நூல்களை மாணவர்களுக்கு மாணவர்களை கொண்டே அறிமுகப்படுத்துவது மாணவர் வாசகர் வட்டத்தின் முதல் நோக்கம். அவ்வப்போது வெளியாகும் சிறந்த நூல்களை மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்கி , உரையாடலை நடத்துகிறார்கள். கல்லூரியில் மற்ற மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவும் செய்கிறார்கள்” என்றார்.
ஆழ்நிலை கல்வி
கல்லூரி முதல்வர் மு.முகமது சாதிக் கூறும்போது, “சென்னை புத்தகத் திருவிழா நடக்கும்போது கல்லூரி நூலகரை அனுப்பி மிகச்சிறந்த நூல்களை வாங்கு வதை வழக்கமாக கொண்டி ருக்கிறோம். கல்லூரி சார்பில் நவீன வசதிகளுடன் பெரிய நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வாசிப்பும் ஓர் ஆழ்நிலைக் கல்வியே என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களுக்குள் ஒளிந்துகொண்டி ருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் மாணவர் வாசகர் வட்டம் செயல்படுகிறது. தரமான நூல்களை வாசிக்கும் மாணவர்கள் தரமான நூல்களை நாளடைவில் படைக்கத் தொடங்குவர்.
தமிழக கல்லூரிகள் அனைத்திலும் மாணவர் வாசகர் வட்டங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தப்பட்டால் நூல்களை விரும்பும் அறிவுசார்ந்த புதிய தலைமுறை உருவாகும்” என்று தெரிவித்தார். தமிழகத்தில் பல கல்லூரிகளில் பிரமிக்கத்தக்க அளவுக்கு நூலக கட்டிடங்களும், புத்தகங்களும் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற மாணவர் வாசகர் வட்டம் அமைப்பு இருப்பதில்லை.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ஒவ்வொருவரும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்: திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவது திமுகவுக்கு மிகவும் முக்கியம் - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு அறிவுரை
- இளம் வயதில் அரசியலுக்கு வரவேண்டும்: இளைஞர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு
- ஆர்.பி.உதயகுமார் காமெடி பண்றார்; தம்பிதுரை பிஜேபில கூட நிற்பார்! - டிடிவி தினகரன் தாக்கு
- தினகரனுடன் கூட்டணி? - கமல் விளக்கம்