[X] Close

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாட்ஸ் அப்-பால் இணைந்த ‘மைக் செட் நண்பர்கள்’


mic-set-team-formed-through-whatsapp

திருச்சியில் நேற்று சந்தித்துக் கொண்ட மைக் செட் நண்பர்கள். (உள்படம்) சா.சவுந்தரராஜன்.

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 10:57 am
  • அ+ அ-

  ‘தொழில்நுட்ப வளர்ச்சியை எளிதில் அறிய முடிகிறது’

செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை மாறி, தற்போது வலைதள வசதி இல்லாத செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் வலைதள சேவை கொண்ட செல்போன்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக பரவலாக புகார் கூறப்படும் அதேவேளையில், பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவி வருவதை யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையில், தமிழ்நாட் டில் அங்குமிங்குமாக தொழில் செய்து வரும் மைக் செட் உரிமையா ளர்களை இணைத்துள்ளது சமூகவலைதள வசதி என்றால் மிகையல்ல.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் சவுந்தரராஜன் (34). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மைக் செட் அமைக்கும் தொழில் புரிந்து வருகிறார்.

சமூகவலைதளத்தின் உதவியுடன் இவர் மேற்கொண்ட முயற்சியால் தமிழ்நாடு முழுவதி லும் உள்ள மைக் செட் அமைப்பாளர்கள் ஏராளமானோர் நேற்று திருச்சியில் முதல் முறையாக நேரில் சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, தொழிலில் தங்கள் எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, 'இந்து தமிழ்' நாளிதழிடம் சவுந்தரராஜன் கூறியது:

கடந்த 12 ஆண்டுகளாக மைக் செட் அமைத்து வருகிறேன். குறிப்பிட்ட சில மாதங்களைத் தவிர விழாக் காலங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கட்சிக் கூட்டங்கள் என என்னைப் பொறுத்தவரை தொழில் பரவாயில்லை. அதேவேளையில், பழுதடைந்த சாதனங்களை மாற்றும்போதும், புதிய சாதனங்களை வாங்கும்போது தரமற்ற மற்றும் போலி சாதனங்களை வாங்கி ஏமாந்துபோவது நேரிட்டது. மேலும், தொழில் போட்டியால் மைக் செட் சாதனங்கள் சும்மா இருக்கக்கூடாது என்று பலரும் பல்வேறு நிலையில் கட்டணங்களை வசூலித்து வருகின்றனர். இதனால், இந்தத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்வோருக்கு வேலை கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தொழிலில் நேரிட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து தெரியவில்லை. வங்கிக் கடன் கிடைப்பதில்லை.

இதையடுத்து, எனக்கு தெரியாதது வேறு ஒரு வருக்குத் தெரிந்திருக்கலாம். எனக்கு தெரிந் தது மற்றவருக்கு தெரியாமல்கூட இருக்கலாம். எனவே, ஒரே தொழிலில் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை, அனுபவங் களைப் பகிரும்போது அனை வருக்கும் விழிப்புணர்வு கிடைக்கும் என்ற நோக்கில் மைக் செட் அமைப்பவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், 'தமிழ்நாடு மைக் செட் நண்பர்கள்' என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கினேன். அதில் மைக் செட் அமைக்கும் தொழில் செய்வோர் ஒவ்வொருவராக இணையத் தொடங்கினர்.

ஆனால், முகநூலில் கருத்துகளை பதிவு செய்வதில் பலருக்கும் இடர்பாடு இருப்பதை உணர்ந்து, 'தமிழ்நாடு மைக் செட் நண்பர்கள்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கினேன். இந்தக் குழுவில் கருத்து பரிமாற்றங்கள் மூலம் தற்போது தரமான மற்றும் நியாயமான விலையில் மைக் செட் சாதனங்கள் கிடைக்கும் இடங்களைத் தெரிந்து வாங்கிக் கொள்கிறோம். வாட்ஸ் அப் குழுவில் தமிழ்நாடு முழுவ திலும் அனைத்து மாவட்டங் களையும் சேர்த்து 160 பேர் இணைந் துள்ளனர். இதில், சிலர் மைக் செட் சாதன விற்பனையாளர்கள்.

குழுவில் உள்ள அனைவரும் நேரில் சந்தித்துப் பேசி தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்து திருச்சியில் கூடினோம்.

வங்கிக் கடன் பெறுவதற்கும், தொழிலில் உள்ள நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை வழங்கவும், அரசின் நலத் திட்டங்களை பெறும் நோக்கிலும், 'மைக் செட் நண்பர்கள்' என்ற பெயரிலேயே விரைவில் சங்கத்தைத் தொடங்கி பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்.

மேலும், அவ்வப்போது மைக் செட் தொழிலில் நேரிடும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்து, அதற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். சங்கம் தொடங்கிய பிறகு தமிழ்நாடு அளவில் அதிகளவில் மைக் செட் அமைக்கும் தொழிலில் உள்ளவர்கள் இணைவார்கள்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close