[X] Close

வேலை கிடைக்கவில்லை எனக் கூறி காலத்தைக் கழிக்காமல் ஒருங்கிணைந்த பண்ணை தொடங்கினால் வாழ்க்கையில் வெல்லலாம்: இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார் கரைவெட்டி பரதூர் அசோக்குமார்


ashokkumar-article

தனது ஒருங்கிணைந்த பண்ணையில் உள்ள மீன்குட்டையில் அசோக்குமார்.படம்: பெ.பாரதி

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 10:38 am
  • அ+ அ-

பெ.பாரதி

வேலை கிடைக்கவில்லை எனக் கூறி வீணாகக் காலத்தைக் கழிக் காமல் ஒருங்கிணைந்த பண்ணை தொடங்கினால் வாழ்க்கையில் வெல்லலாம் என இளைஞர் களுக்கு வழிகாட்டுகிறார் அரிய லூர் மாவட்டம் கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார்(45).

10-ம் வகுப்பு படித்துள்ள இவர், கடந்த 2012-13-ல் அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் விவசாயிகள், இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவது குறித்து பலரும் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அசோக் குமார், அதன்பின் வேளாண்மை, மீன்வளம், கால்நடை என பல்வேறு துறை அலுவலர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றார். அதன்படி, தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் மீன் குட்டை, கோழிப்பண்ணை, வெள்ளாடு, செம்மறி ஆடு, பசுக் கள் உள்ளிட்டவை கொண்ட ஒருங் கிணைந்த பண்ணை அமைத் துள்ளார். இவரது மனைவி செந்தமிழ் செல்வி உதவி வருகிறார்.

கழிவுகளே உணவு, உரம்

கோழிகள் உண்ணும்போது சிதறும் தீவனம் மற்றும் கோழி களின் எச்சங்கள் மீன்களுக்கு உணவாகின்றன. ஆடு, மாடுகளின் எருவை கோ-5, வேலிமசால் உள்ளிட்ட தீவன பயிர்களுக்கு உரமாகக் கொடுக்கிறார். வளரும் தீவனம் மீண்டும் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது.

பரண்மேல் ஆடு வளர்ப்பு

நாட்டு ஆடு, தலைச்சேரி இன ஆடு, கொடி ஆடு, செம்மறி ஆடு என பலவகை ஆடுகளை வளர்த்து வரும் அசோக்குமார். ஆடுகளுக்கு என பரண் அமைத் துள்ளார். இதனால், ஆடுகளின் எருவை தினமும் அள்ள வேண்டியதில்லை. மேலும், ஆடுகளின் சிறுநீரும் எருவுடன் கலப்பதால், எருவின் தன்மையும் கூடுகிறது என்கிறார் அசோக்குமார்.

152 நாட்களில் மீன் வளர்ப்பு

தன்னிடம் உள்ள 2 மீன் குட்டைகளிலும் சுமார் 5 ஆயிரம் கெண்டை மீன் குஞ்சுகளை விடும் அசோக்குமார், 152 நாட்களுக்குப் பின் நன்கு வளர்ந்த அனைத்து மீன்களையும் விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார். வளர்ப்புக்காக கிருஷ்ணகிரி அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திலிருந்து தேவையான மீன் குஞ்சுகளை வாங்கி வருகிறார்.

நாட்டுப் பசு வளர்ப்பு

தனது ஒருங்கிணைந்த பண்ணையில் வளர்க்கப்படும் 10 பசுக்களின் (நாட்டுப் பசு, சிந்துப் பசு) மூலம் தினமும் 30 முதல் 50 லிட்டர் வரை பால் விற்பனை செய்து வருகிறார்.

ரூ.4 லட்சம் லாபம் பெறலாம்

தனது ஒருங்கிணைந்த பண்ணை குறித்து அசோக்குமார் கூறியது: இளைஞர்கள் படித்துவிட்டு, படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்கும் என காத்திருக்காமல் இதுபோல சுயதொழில் தொடங் கலாம். கோழி வளர்ப்புக்கும், சோலார் பேனல் அமைக்கவும் அரசு மானியம் தருகிறது. கறவைப் பசுக்கள், மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்றவற்றுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி அளிக்கின்றன. நிலம் இல்லாத வர்கள் முதலீடு செய்து, நிலம் உள்ளவர்களுடன் இணைந்து இத்தொழிலைத் தொடங்கலாம். இதுபோன்ற சிறு பண்ணைக்கு அதிகமான கூலித் தொழிலாளர்கள் தேவையில்லை. குடும்பத்தில் 4 பேர் இருந்தால் போதும். அவர் களின் உழைப்பிலேயே அனைத்து வேலைகளையும் செய்து முடிக் கலாம். என் மகன் காலையில் கோழிகளுக்கும், மீன்களுக்கும் தேவையான உணவுகளை கொடுத்துவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிடுவார். மாலையில் கல்லூரி முடிந்து வந்து கோழி, மீன், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கொடுத்துவிடுவார். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காவிட்டால் இதையே முழுநேர தொழிலாக செய்வேன் என்று உறுதியுடன் உள்ளார். காலை, மாலை தவிர்த்த மற்ற நேரங்களில் என் மனைவி தீவனம் கொடுத்து வருகிறார்.

ஆடு, மாடுகளுக்குத் தேவை யான தீவனப் பயிர்களை வளர்க் கும் வயல் வேலைகளுக்கு மட்டும் அவ்வப்போது, கூலித்தொழிலாளர் களை பயன்படுத்துவது வழக் கம். ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை லாபம் தரக்கூடிய தொழிலாக உள்ள ஒருங்கிணைந்த பண்ணைத் தொழிலை ஆர்வமுள்ள யாரும் தொடங்கலாம்.

எனது பண்ணையை விவசாயி கள் பலரும் வந்து பார்த்து, சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுச் செல்கின்றனர் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close