[X] Close

தமிழிசை முதல் ட்ரம்ப் வரை.. யாரையும் விட்டுவைக்காத செக்க சிவந்த வானம் ஸ்பூஃப்: இது வேற லெவல்!


spoof-of-chekka-sivandha-vanam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Sep, 2018 19:53 pm
  • அ+ அ-

எந்த ஒரு பெரிய விஷயத்தையும் லைட்டர் வெயின்ல கலாய்க்கணுமா அதை கனகச்சிதமாக செய்திவிடுகிறார்கள் நெட்டிசன்கள். அப்படி ஒரு லைட்டர் வெயின் வீடியோ இன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

அது சினிமா ரசிகர்களால் சமீப நாட்களாகக் கொண்டாடப்பட்டு வரும் செக்க சிவந்த வானத்தின் ட்ரெய்லர். அந்த ட்ரெய்லரைத்தான் ஸ்பூஃப் செய்திருக்கிறார்கள். இந்த டீஸருக்கு நாம நிச்சயமா தனியா விமர்சனம் எழுதியாக வேண்டும். 
ஓப்பனிங்கே செம்ம எனும் சொல்லும் அளவுக்கு தமிழக சட்டப்பேரவையில் ஃபிரேம் கட் செய்திருக்கிறார்கள். 
அடுத்து சேனாபதி இன்ட்ரோ. இந்த சேனாபதி யாரு? மாஃபியாவா பிசினஸ்மேனா அரசியல்வாதிகளோட ஃபிரெண்டா இல்ல ராபின்ஹுட்டா என்று கேட்கும்போது மோடி சிரிக்கிறார்.

அப்புறம் நம் பெரியண்ணன் வருகிறார். அவர்தாங்க உலகில் எந்த நாட்டில் பிரச்சினை என்றாலும் கட்டப்பஞ்சாயத்து பேசப் போவாரே அமெரிக்காவின் அதிபர். ட்ரம்ப் கச்சிதமாக அந்த டயலாக்கில் பொருந்தியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் "அவருக்கு ரெண்டு முகம் இருக்குக்கா. ஒன்டு பாசமா இருப்பார் நல்லா கவனிப்பார். ஆனால் அதுக்குப் பின்னால் வேறு ஒரு முகம்" என்ற இலங்கைத் தமிழ் வசனத்தில் விஜயகாந்தின் கட் ஷாட்களும் அதற்கு மிக்ஸ் செய்யப்பட்டுள்ள பிரேமலதாவின் மேடை பேச்சும் அடடா அற்புதம் போங்க. வேறு ஒரு ட்ரெயலர்ல ஸ்பூஃபா பார்த்தாலும்கூட விஜயகாந்த நல்லாத்தான்யா இருக்கிறார்.

இடையே இடையே நம்ம தமிழிசை அக்காவும் வந்துபோறாங்க. தமிழக அரசியலலில் அவ்வப்போது கொழுத்திப்போடுவது போல். சின்ன சின்ன டயலாக்கில் பொருத்தியிருந்தாலும்கூட நச்சுன்னு நாலு வார்த்தைல உட்கார வச்சிருக்காங்க. 

அட இதெல்லாம் விடுங்க ஒரு ஃப்ரேம்ல நம்ம சேலம் கலெக்டர் ரோகினிகூட இருக்காங்க.


நீ வந்து சென்றனை... எனை என்ற பாடல் வரிக்கு அசற வைக்கிறார் ஸ்டாலின். சூரியனால் செக்கச் சிவந்த வானத்தின் பின்னணியில் ஒளிர்கிறார். ஒத்த ராஜாவாத்தான வருவேன் ராஜாவா வந்தா ராஜாவுக்கு நூறு தோஸ்துன்னு வரும் டயலாக்கில் ஸ்டாலினின் மாஸ் தற்போதைய தமிழக அரசியலுக்கு ஒத்துப் போகிறது. ஒத்த ராஜா... அழகிரி ஆதரவாளர்கள் இதை நோட் செய்து கொள்ளலாம். இனியும் முயற்சி செய்ய வேண்டாம் என்றால் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

சரி விமர்சனம் என்றால் ஒரு ஹைலைட்டாவது சொல்லணும்ல. அதுதான் எடப்பாடிக்கு ஃபிட் செய்திருக்கும் கடைசி டயலாக். "உனக்கு யாராவது பழைய ஃபிரெண்ட் இருக்காங்களா நம்பாத" இந்த வசனத்தை எடப்பாடி பேசுவது போல் காட்டி கட் பண்ணா பன்னீர்செல்வம் பளிச்சென நிற்கிறார். அணிகள் இணைந்தால் மனங்கள் இணையவில்லை என்று அதிமுகவுக்குள்ளே அவ்வப்போது அதிருப்தி குரல்கள் எழுகிறதே அதற்கு இதுதான் பெஸ்ட் டயலாக். ட்ரெய்லரின் ஹைலைட்டே இதுதான்.

ட்ரெய்லரில் முதலில் வரும் வாய்ஸை கடைசியாக விமர்சிப்பதுதான் இந்த ஸ்பூஃபுக்கு செய்யும் மரியாதை.
இன்னிக்கு இருக்கிற கிரிமினலுக்கு நிறைய பேரு இருக்கு... தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங்பின், சேனாபதி.. ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரபலம். தமிழிசை தொடங்கி ட்ரம்ப் வரை யாரையும் விட்டுவைக்காத இந்த ஸ்பூஃப் மொத்ததில் வேற லெவல்.

DINSADS என்று வீடியோவை எடிட் செய்தவர் கிரெடிட் லைன் வருகிறது. கடைசியில் கட்ஸ் GUTS DINSADS என்று எண்ட் கிரெடிட் வருகிறது. இது ஸ்பூஃப் என்றாலும்கூட இதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close