[X] Close

ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களை ஓவியமாக வரைந்த அரசு பள்ளி மாணவர்


student-makes-art-of-his-teachers

மாணவர் சதீஷ் | மாணவர் வரைந்த ஆசிரியர்களின் ஓவியம்

  • kamadenu
  • Posted: 05 Sep, 2018 10:22 am
  • அ+ அ-

ஆசிரியர் தினத்தை யொட்டி பள்ளி ஆசிரியர்களின் உருவங்களை ஓவியமாக வரைந்து அதை ஆசிரியர்களுக்கே பரிசாக வழங்கிய அரசுப் பள்ளி மாணவரை பொதுமக்கள் பாராட்டினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சதீஷ் (13) என்பவர் ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களின் உருவங்களை ஓவியமாக வரைந்து, அதை அவர்களுக்கே பரிசாக வழங்கினார்.

மேலும், சாக்பீஸ் துண்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவத்தை செதுக்கி, அதை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

இது குறித்து மாணவர் சதீஷ் கூறும்போது, " மாணவர்களை திறமையானவர்களாக மாற்றுவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் இல்லாமல், மாணவர்களால் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது.

இதை ஒவ்வொரு மாணவரும் நினைவு கொள்ள ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருநாளில் என் பள்ளியைச் சேர்ந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு, ஏதாவது ஒரு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தேன். அவர்களது உருவங்களை வரைந்து, அதனை அவர்களுக்கே வழங்க முடிவு செய்தேன்.

இதையடுத்து, அனைத்து ஆசிரியர்களின் உருவங்களையும் வரைந்து, அதை ஒன்று சேர்த்து அந்த ஓவியங்களை ஆசிரியர்களுக்கு இன்று (நேற்று) பரிசாக வழங்கினேன்.

மேலும், சாக்பீஸ் துண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை செதுக்கி, அதை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினேன். இதன் மூலம் அவர்களை பெருமைப்பட செய்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

பள்ளி மாணவனின் வித்தியாசமான முயற்சியை ஆசிரியர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close