[X] Close

வெள்ள நிவாரணத்துக்காக பார்வையற்ற மாணவர்கள் கேரளாவுக்கு நிதியுதவி


visually-challenged-students-helped-kerala-floods

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 04 Sep, 2018 16:38 pm
  • அ+ அ-

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பார்வையற்ற அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நிதி சேகரித்து, கேரள வெள்ள நிவாரணத்துக்கு அளித்துள்ளனர்.

இந்தப் பள்ளியில் பயிலும் 37 மாணவர்கள் கேரள வெள்ள நிவாரணத்துக்காக சேகரித்த ரூ.20,639-ஐ ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் விசித்ரா, ஆசிரியர் சரவண மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் சு.கணேஷிடம் வழங்கினர்.

அப்போது, பிறரது துயரத்தை நீக்குவதற்காக இத்தகைய மனிதநேய மிக்க செயலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை ஆட்சியர் பாராட்டினார்.

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறியது:

கேரளாவில் வெள்ளத்தால் மக் கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்விப்பட்டோம். விருப்பம் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதன்பிறகு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளிக்கு தினமும் எங்களுக்கு உதவி செய்ய வருகை தருவோரிடம் இருந்து கடந்த சில நாட்களாக ரூ.20,639-ஐ சேகரித்தோம்.

அந்த தொகையை ஒரு பையில் எடுத்து வந்து ஆட்சியரிடம் வழங்கினோம்.

பார்வையற்ற எங்க ளுக்காக நாள்தோறும் பலர் உதவி செய்து வரும் நிலையில், பிறருக்கு நாங்கள் உதவி செய்ததும், அதை ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட் டியதும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close