[X] Close

நெட்டிசன் நோட்ஸ் : வைரமுத்து பிறந்த நாள் - கள்ளிக்காட்டு இதிகாசம் படைத்த கதாநாயகன்!


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 16:26 pm
  • அ+ அ-

கவிஞர் வைரமுத்து இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 இதனைத் தொடர்ந்து நெட்டிச்ன்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Karthikraja

நாங்களும் கூட உன் பாடலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் ஆதலால்.....

#மீ2

#வைரமுத்து#பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

Anat Hareesh

நான் வரைய நினைத்தது சித்திரம்தான். வந்திருப்பவை கோடுகளே. ஆனால் கோடுகளும் சித்திரங்களே!

இனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள் கவி.வைரமுத்து

 

@Sahayarani

 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்....

 

இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைரமுத்து சார்....

 

Jeyaprabu Jai

தமிழ்க்கு பெருமை சேர்த்தவர்!

கவிப்பேரரசு “வைரமுத்து” அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

 

ட்வீட் 

 

 

Karthik

''குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!''

- #வைரமுத்து

 

ச ப் பா ணி

வசந்தங்கள் வாழ்த்தும்போது

உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர் காலம் முழுவதும்

மகிழ்ந்து உனக்கு வேராவேன்

-வைரமுத்து

 

மகிழ்வித்து மகிழ்

இவரின் தமிழ் கேட்க தெகட்டா சொல் நடை இலக்கிய நடை அனைத்தும் ஒன்றே இருக்கும் இடம் வைரமுத்து

 

Wolfrik

கம்பன் தன் கதை நாயகியினை பாடியது போல அப்படி ஒரு உருவகம் தந்த இரண்டாம் கம்பன் அவர்.

 

நம்மை போலவே உருகி ரசித்து ஆனால் நம்மால் சுத்தமாக  முடியாத,அற்புதபாடலை கொடுத்தவர் வைரமுத்து

 

அப்பாடலை எழுதியதற்காகவே அவரை கொண்டாடலாம்,

அதனால் ஸ்பெஷல் வாழ்த்து

 

V ! N O  ❤

 

கள்ளிக்காட்டு இதிகாசம்

படைத்த கதாநாயகன்!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு

அகவை தின வாழ்த்துக்கள்!!!!!

 

 

karthikeyan Madhu

 

அகவை தின வாழ்த்துக்கள் கவிபேரரசு திரு.@vairamuthu அவர்களுக்கு. நின் தமிழோடு பல்லாண்டு... பல்லாண்டு... பல்லாயிரத்தாண்டு.... பலகோடிநூறாயிரம்... வாழ்க!!!!

வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்..

 

Henry Balraj

வைரமுத்து பிறந்ததின பகிர்வு

 

பிணங்களை எரிப்பதற்காக மேல் நாட்டில் மின்சார அடுப்பு தயாரிக்கிறார்கள்.இந்தியாவில் மகன்களை தயாரிக்கிறார்கள்

-வைரமுத்து

 

#உசுரவிட்டு போறதுதான் சாவா?

ஊரவிட்டு போறதும் சாவுதான்

#வைரமுத்து

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close