[X] Close

நெட்டிசன் நோட்ஸ்: இந்தியா தடுமாற்றம் - எங்கே.. மழை.. என்றே மனம்..தேடுதே...


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 17:30 pm
  • அ+ அ-

மான்செஸ்டரில் இன்று தொடர்ந்து நடைபெறும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் 240 ரன்கள் இலக்கை விரட்டி வரும் இந்திய அணி ரோஹித், ராகுல், கோலி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

 

Crazy Kirukan

 

அடேய் ஸ்கோர் கார்ட் பாத்தா பயந்து பயந்து வருதுடா டேய்.

 

Surya Born To Win

எங்கடா இங்க விளையாண்டுட்டிருந்த ரோஹித்து, கோலி, ராகுல், கார்த்திக்லாம்??

 

Raj

 

 அதிர்ஷ்டம் இந்தியா பக்கம் அப்படியே கொண்டு போய்டுங்கடா ரன்ன

இனி டாட் பால் வேணாம்டா பாலுக்கு பால் கொண்டு போங்க ஃபிரசர் வராது

 

Cinderella

 

 

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருளையும் உருளுதடி...

 

என்றும் சூர்யா வெறியனாக

 

காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு அதனோட கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்    

 

Prabhudhan

 

 

ஒரேயொரு Match'க்கே இப்படி தோனிய தேடுறோம்.

 

Raj

 

ஐபிஎல் நம்பிக்கை நட்சத்திரம்

ரிஷப் பந்த் &  ஹர்திக் நீங்கள் யாரச்சும் ஒருத்தன் சதம் போடுங்கடா ஜெயிச்சுரலாம் #INDvsNZ

 

kumar

 

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா

 

சுதன்.தம்பி

 

ஒரே நாடு ஒரே ரன்

 

ராகுல்

ரோகித்

கோலி

 

தமிழ்தேசியம் கள்ளாபெட்டி சிங்காரம்

 

 

டேய், கண்ணுங்களா, செல்லங்களா, பொறுமையா‌ ஆடுங்கடா ஸ்கோர் கம்மியாதான்டா அடிங்கனு

 

கருப்புபூனை

 

எங்கே.. மழை

என்றே மனம்.. தேடுதே...

சீக்கிரம் ஓடிவா..         

 

ƒ      ᶰ

 

இந்த முறை நியூசிலாந்து இந்தியா மேல சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பண்ணிக்கிட்டு இருக்காய்ங்க...       

 

கவிஞன் மோக்கியா

 

இந்தியா ஜெயிக்க ஒரே வழி தான் இருக்கு

 

என்ன மச்சான் ?

 

நியூசிலாந்து தோக்கணும் டா

 

பழைய ஜோக் தங்கதுரைகள்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close