[X] Close

அறிவியல் மேஜிக்: நெருப்பு இல்லாமல் எரியும் காகிதம்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 11:02 am
  • அ+ அ-

-மிது கார்த்தி

நெருப்பு இல்லாமல் ஒரு காகிதத்தை உங்களால் எரிய வைக்க முடியாதா? முடியும். ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோமா? (பெரியவர்கள் உதவியுடன் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.)

என்னென்ன தேவை?

லென்ஸ் (பூதக்கண்ணாடி), காகிதம், தீக்குச்சி

எப்படிச் செய்வது?

# சூரிய வெளிச்சத்தில் ஒரு காகிதத்தை விரித்து வையுங்கள். அதன் மீது சூரிய ஒளி படுமாறு லென்ஸைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

# லென்ஸ் வழியே சூரியக் ஒளி ஒரு புள்ளியில் குவியும்.

# சிறிது நேரத்தில் காகிதத்திலிருந்து புகை வெளிவரத் தொடங்கும்.

# அடுத்து, அந்தக் காகிதத்தின் மீது தீக் குச்சியை எடுத்து வையுங்கள். இப்போது தீக்குச்சியின் மீது லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களைக் குவியுங்கள்.

# சிறிது நேரத்தில் தீக்குச்சி தானாக எரியும்.

காரணம்:

லென்ஸ்  ஒளிக்கற்றைகளை ஒரு புள்ளியில் குவிக்கப் பயன்படுகிறது. சூரியக் கதிர்கள் ஒன்றாகக் குவியும் போது காகிதத்திலும் தீக்குச்சியிலும் வெப்பம் அதிகரித்து நெருப்பை உண்டாக்கிவிடுகிறது.

பயன்பாடு:

சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி சூரிய மின்சக்தியை உருவாக்கும் தகடுகளில் இந்த நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.ஓவியம்: வாசன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close