[X] Close

சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது; சர்வதேச கண் மருத்துவ மாநாடு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


2

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 08:40 am
  • அ+ அ-

சென்னையில் 2 நாட்கள் நடக்கும் சர்வதேச கண் மருத்துவமாநாட்டை முதல்வர் பழனிசாமிநேற்று தொடங்கி வைத்தார். இதில் 2000-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

இன்ட்ராகுலர் இம்ப்ளான்ட் அண்டு ரிஃப்ராக்டிவ் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஐஐஆர்எஸ்ஐ) சார்பில் கண் மருத்துவம், புதிய மருத்துவ தொழில்நுட்பம், அறுவை சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கும் வகையில் ஆண்டுதோறும் மருத்துவ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த அமைப்பின் 34-வது கண் மருத்துவ அறுவைசிகிச்சை நிபுணர்களின் 2 நாட்கள் மாநாட்டை முதல்வர் பழனிசாமி சென்னை கிண்டியில் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர், கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள், மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த மாநாடு குறித்து ஐஐஆர்எஸ்ஐ பொதுச் செயலாளரும், டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை தலைவருமான அமர் அகர்வால் கூறியதாவது:நம் நாட்டில் 1.20 கோடி பேர் பார்வை திறனற்றவர்களாக வாழ்கின்றனர். மேலும், 45 கோடிபேருக்கு பார்வை கோளாறுகளை சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, இங்கு நடக்கும் 2 நாட்கள் மாநாட்டில் கண் மருத்துவத்தின் தற்போதைய நிலை, உலக அளவில் கண் மருத்துவத் துறையில் வரும் புதிய கண்டுபிடிப்புகள், அறுவை சிகிச்சை முறைகள் குறித்து இந்த மாநாட்டில் வல்லுநர்களோடு விவாதிக்கப்படும். அமெரிக்கா, துருக்கி, பிரேசில்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து கண் அறுவை சிகிச்சை மருத்துவ வல்லுநர்கள் 20 பேர் பங்கேற்று, நவீன அறுவை சிகிச்சைகள் குறித்து விவரிப்பார்கள். கண் மருத்துவர்கள், மாணவர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலர் பீலா ராஜேஷ், ஐஐஆர்எஸ்ஐ தலைவர் டாக்டர் அமித் தரப்தர், முன்னாள் தலைவர் டாக்டர் மோகன் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close