[X] Close

கால்பந்து விளையாடும் மாடு: இணையத்தில் வைரலான வீடியோ


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 17:04 pm
  • அ+ அ-

கால்பந்தாட்டத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் நேசிக்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது,

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் மாடு ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப்  பரவி வருகிறது.

அந்த வீடியோவில் காணப்படும் மாடு இளைஞர்களிடமிருந்து கால்பந்தை தன் வசம் வைத்துக்கொண்டு அவர்களை நெருங்க விடாமல் தடுக்கிறது.

ஒரு வழியாக அந்த மாட்டிடமிருந்து இளைஞர் ஒருவர் பந்தைக் கைப்பற்றி தனது நண்பருக்கு கடத்துகிறார். உடனே அந்த மாடு அந்த இளைஞரை நோக்கி ஓடுகிறது. அவர் மற்ற நபருக்கு பந்தை உதைத்தால் அவரை நோக்கி தனது வேகத்தைத் திருப்புகிறது அந்த மாடு.

அந்த இளைஞர்களும் தொடர்ந்து மாட்டுடன் கால்பந்து ஆடுகின்றனர். இந்தச் சம்பவம் கோவாவில் நடந்துள்ளது.

இதனை கிரிக்கெட் வர்ணையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகியது.

ட்வீட் 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close