[X] Close

நெட்டிசன் நோட்ஸ்: நந்தினி- தனி ஒருத்தியா, தமிழினத்தில் ஒருத்தியா?


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 16:18 pm
  • அ+ அ-

மது ஒழிப்பை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் 'மது உணவுப் பொருளா' என்ற கேள்வியை அவர் எழுப்பிய காரணத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு, நந்தினி சிறையில் உள்ளார்.

நாளை மறுநாள் (ஜூலை 5) அவருக்குத் திருமணம் என்ற சூழலில், நந்தினியை விடுதலை செய்யக்கோரி ஏராளமானோர் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Krishna Gopal

அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தினால் தவறா? ஒவ்வொரு நாளும் அச்சத்தோடே வாழ வேண்டியதிருக்கு. நீதிபதியிடம் நேர்மையாக ஒரு கருத்தைப் பதிவு செய்தல் என்பது குற்றமாகுமா? அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறதா?

Raju Mariappan

வெளியாட்களால் நடந்தது போக இப்போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களாலேயே சின்னச் சின்னக் குழந்தைகள் மது போதையால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கொல்லப்படுகின்றன.

அதனால் டாஸ்மாக் வேண்டாம் என்று சொன்ன நந்தினி திருமண நேரம் பார்த்து சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

Sathish S Kumar

மக்கள் நல்லதுக்குப் போராடின நந்தினியை கைது பண்ணி அடைச்சு இருக்காங்க. இந்தியா ஜனநாயக நாடாம்.

Velmurugan

#நந்தினி தனி ஒருத்தி அல்ல தமிழினத்தில் ஒருத்தி.! #ReleaseNandhini

கருப்பு கருணா

ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று நினைக்கிற நாட்டில் ஒரு உண்மையைப் பேசியதற்காக ஒரு திருமணத்தை நிறுத்தி விடாதீர்கள்...

நீதிமன்றமே நந்தினியை விடுதலை செய்!

D-K0YrSU8AA5MUW.jpg 

Fazil Fazil

வலியவனுக்கு ஒரு நீதி...!!!

எளியவனுக்கு ஒரு நீதி...!!!

தோழர் கார்த்திகேயன்

அறிந்தோர் அறியாமை புரிகையில் கள்வன் நீயன மறந்தீரோ.?

அறிவான் அவனே கள்வன் மாற்றார் அறிந்தால் மானமுன்டோ.!

பில்லங்குடி அம்பலகாரர்

மதுவினால் வரும் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனி ஒரு பெண்ணாக நந்தினி போராடுவதைப் பார்க்கும் போதெல்லாம் மதுவினால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆற்றாமையை உணருகிறேன்.

தினேஷ் கண்ணன்

தனியாக என்ன செய்ய முடியும் என்பதற்கு நந்தினி ஓர் உதாரணம். அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.

Edwin Swamikkan

ராகுல் காந்தி தொடங்கி எச்.ராஜா வரை பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளிலெல்லாம், அவர்களைக் கைது செய்தது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. நந்தினிக்கு மட்டும் ஏனிந்த சிறைவாசம்?

65538811_414681255928487_3663762959261237248_n.jpg 

90's kid யாமினி

தப்பைத் தட்டிக் கேக்காததும் தப்புதான்! நமக்கு நடக்குற வரைக்கும் எல்லாமே செய்தி மட்டும் தான்ல?

பிரகாஷ்

மதுவை அரசே விற்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தவறா என இனி எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க மாட்டேன் என்று எழுதித்தர மறுத்ததால் நந்தினிக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுகிறது.

Ranjith Rakshan Priyanka

இல்லற வாழ்க்கையில் இணைய இருந்தவளை சிறை வாசத்திற்கு தள்ளும் நபர்கள். ஏனெனில் ஜிமிக்கி கம்மல் முதல் நேசமணி வரை டிரெண்டிங் செய்த நமக்கு நந்தினி ஒன்றும் அக்காவோ தங்கச்சியோ இல்லையே... மாற்றான் தோட்டத்து மலர்தானே...

நம் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடக் கூடாது என்று ஒயின்ஷாப்பில் நின்று தனியாகப் போராடிய தங்கச்சி  நந்தினி.

65301446_2292715000978940_5544623206553354240_n.jpg 

Raja Revathy

போராட்டக் குணமிக்க நந்தினிக்கு அதே போராட்டக் கள நாயகன் மாப்பிள்ளையாக கிடைத்திருக்கிறார். தற்போது கூட அவர்தான் வெளியில் எடுக்க முயற்சிகிறார்.

பெண் சிறை சென்றால் திருமணமே கேள்விக் குறியாகும் காலத்தில், சிறை சென்ற தன் வருங்கால மனைவியை மீட்கப் போராடுகிறார் நந்தினியின் வருங்காலக் கணவர் குணா ஜோதிபாசு!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close