[X] Close

உ.பி.யில் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்: உடல் அடக்கத்துக்கு சற்று முன் உயிர் பிழைத்த இளைஞர்


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 12:21 pm
  • அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகம்மது ஃபர்கான் (20) என்ற இளைஞர் கடந்த ஜூன் 21-ம் தேதி ஏற்பட்ட விபத்துக்கு பிறகு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஃபர்கான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது.

இதுகுறித்து ஃபர்கானின் அண்ணன் முகம்மது இர்ஃபான் கூறும்போது, “நாங்கள் உடல் அடக்கத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது எனது தம்பியின் உடலில் லேசான அசைவு இருப்பதை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவனை நாங்கள் உடனடியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவன் உயிருடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்” என்றார்.

இர்ஃபான் மேலும் கூறும்போது, “தனியார் மருத்துவமனைக்கு ரூ.7 லட்சம் வரை செலுத்தினோம். அதற்கு மேல் எங்களிடம் பணம் இல்லை என கூறிவிட்டோம். அவர்கள் எனது தம்பி இறந்ததாக அறிவித்தனர்” என்றார்.

ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் ஃபர்கானுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களில் ஒருவர் கூறும்போது, “நோயாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு மூளைச்சாவு ஏற்படவில்லை. அவருக்கு நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளது” என்றார். முதன்மை மருத்துவ அதிகாரி நரேந்திர அகர்வால் கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close