[X] Close

நபிகள் காட்டிய வழி: மற்றவர் உயிர், பொருள், மானத்தை புனிதமாகக் கருதுங்கள்


nabi-vazhi

  • kamadenu
  • Posted: 16 Jun, 2018 09:54 am
  • அ+ அ-

ஸதகத்துல்லாஹ் ஹஸனி

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி, இறைத்தூது உலகின் முன் வைக்கப்பட்டது. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார்கள் என்ற அஸ்திவாரத்தின் மீது புதிய சமூகம் செம்மையாக அமைந்தது. இத்தருணத்தில் அவர்களின் உள்மனம் தாம் உலகில் இருக்கும் காலம் சொற்பமே என்ற மெல்லிய ஒலிக்கீற்றை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! அவ்வாறு தான் நபி (ஸல்) ஹிஜ்ரி 10-ம் ஆண்டு யமன் தேசத்துக்கு முஆத் (ரலி) அவர்களை அனுப்பும்போது கூறிய பொன்மொழி கருத்து கூறுகிறது.

‘‘அநேகமாக இந்த ஆண்டுக்குப் பின் என்னை சந்திக்க மாட்டாய் முஆத்! இந்தப் பள்ளிவாசலுக்கும் எனது மண்ணறைக்கும் அருகில் தான் நீ செல்வாய்.’’ - நபி (ஸல்) அவர்களின் இந்த சொற்களால் முஆத் (ரலி) கண்கலங்கினார்கள்.

அல்லாஹ் தனது தூதருக்கு அழைப்புப் பணியின் பலன்களை காட்ட நாடினான். இந்த அழைப்புப் பணிக்காகவே 20 ஆண்டுக ளுக்கு மேலாக பல சிரமங்களைச் சகித்தார்கள். மக்காவிலும் அதன் ஓரங்களிலும் வாழ்கிற அரேபிய வம்சங்களும், அதன் முக்கிய பிரமுகர்களும் ஒன்றுசேர்ந்து இஸ்லாமிய மார்க்கச் சட்டதிட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அமானிதத்தை நிறைவேற்றி னார்கள். தூதுத்துவத்தை முழுமையாக எடுத்துரைத்தார்கள்.

சமுதாயத்துக்கு நன்மையை விரும்பினார்கள் என்ற வாக்கை மக்களிடம் இருந்து நபி (ஸல்) வாங்கவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அல்லாஹ்வின் இந்த விருப்பத்துக்கேற்பவே கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறை வேற்ற மக்கா செல்லவிருக்கிறேன் என நபி (ஸல்) அறிவித்தார்கள். இதைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந் தனர். துல்கஅதா முடிய 5 நாட்கள் இருக்கும்போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள்.

பாலைவனங்களைக் கடந்து வந்து, மக்கா அருகில் தூத்துவா என்ற இடத்தில் தங்கினார்கள். அங்கு ஸுப்ஹ் தொழுகையை முடித்துக்கொண்டு குளித்துவிட்டு மக்கா நோக்கி புறப்பட்டார்கள். அது ஹிஜ்ரி 10. துல்ஹஜ் பிறை 4, ஞாயிறு காலை நேரமாகும். சங்கைமிக்க கஅபா வந்தபோது தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். தவாஃபையும், ஸயீயையும் முடித் துக்கொண்டு கஅபாவில் இருந்து புறப்பட்டு மக்காவின் மேட்டுப் பகுதியில் தங்கினார்கள்.

தர்வியா என்றழைக்கப்படும் துல்ஹஜ் பிறை 8-ல் நபி (ஸல்) மினா நோக்கிப் புறப்பட்டார்கள். மினாவில் 5 நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜர் தொழுகைக் குப் பின் பத்னுல் வாதி என்ற இடத்துக்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி 1 லட்சத்து 24 ஆயிரம் முஸ்லிம் கள் ஒன்றுகூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.

ஹஜ்ஜத்துல் விதா உரை

‘‘மக்களே! இந்த துல்ஹஜ் மாதத்தையும் இந்த பிறை 9-ம் நாளையும் இந்த மக்கா நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும், பொருளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல.

அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழிவாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலா வதாக. அறியாமைக் கால வட்டி யும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானி தமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனு மதிக்கக்கூடாது. நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை யாதெனில், நல்ல முறையில் அவர்களுக்கு உணவும், ஆடையும் அளிக்கவேண்டும். நான் விட்டுச்செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒரு போதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

எனக்குப் பின் எந்தவொரு இறைத்தூதரும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட 5 வேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமலான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனம்உவந்து உங்கள் செல்வத்துக்கான ஏழை வரியை நிறைவேற்றுங்கள். உங் கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலை வர்களுக்குக் கட்டுப்படுங்கள். இந்த நற்செயல்களால், இறைவன் உங்க ளுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் (சொர்க்கத்தில்)நுழைவீர்கள்.”

இவ்வாறு நபிகள், தமது உரையை முழுமையாக முடித்த போது, ‘‘இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டோம்’’ (அல்குர்ஆன் 5:3) என்ற வசனம் இறங்கியது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close