[X] Close

விக்கெட்டுக்கு ‘ராயல் சல்யூட்’


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 10:11 am
  • அ+ அ-

-மிது கார்த்தி

கிரிக்கெட்டில் வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடுவதில் கரீபியன்களை அடித்துக்கொள்ள ஆட்களே கிடையாது. 2016-ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றதும் அவர்கள் போட்ட ‘கக்னம் ஸ்டைல்’ நடனம் ஒட்டுமொத்தமாக லைக்குகளை அள்ளியது.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொண்டாட்ட வடிவத்தை ‘ராயல் சல்யூட்’டாக மாற்றி அதகளப்படுத்தத் தொடங்கியிருக்கி றார்கள் கரீபியன்கள்.

இந்த சல்யூட் கொண்டாட்டத்தின் ‘காப்பி ரைட்’டர் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வார்னர், மேக்ஸ்வெல் விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ராணுவ நடையில் மிடுக்காக அவர் நடந்துவந்தார்.

காலைத் தூக்கி தரையில் அடித்து, விரைப்பாக நின்றுகொண்டு ‘ராயல் சல்யூட்’ அடித்தார். சல்யூட் அடித்த கையோடு, கைகளை விரித்து குபீரென்று சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஷெல்டன். அவரோடு சேர்ந்து ஆந்த்ரே ரஸலும் சல்யூட் அடித்து கொண்டாடினார்.

கரீபியன்களின் சல்யூட் கொண்டாட்டம், இந்த உலகக் கோப்பையில் முத்தாய்ப்பாக மாறிவிட்டது. கேலரியில் உட்கார்ந்து போட்டிகளை ரசிக்கும் கரீபியன் ரசிகர்களும் ‘சல்யூட்’ அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களிலும் ஷெல்டன் கோட்ரெல் லின் சல்யூட் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிகின்றன; ஹார்ட்டின்கள் பறக்கின்றன!

இந்த சல்யூட்டுக்கு என்ன காரணம்? “தொழில்ரீதியாக நான் ஒரு ராணுவ வீரன். நான் அடிப்பது மிலிட்டரி சல்யூட். ஜமைக்கா ராணுவத்துக்கு மரியாதை செலுத்தவே சல்யூட் அடிக்கிறேன்” என்று விரைப்பாக பதில் சொல்கிறார் ஷெல்டன்.

3.jpg 

‘ஹாட்ரிக்’ கோப்பை

ஐ.சி.சி. நடத்தும் மூன்று விதமான கோப்பை களையும் வென்ற ஒரே கிரிக்கெட் கேப்டன் நம்ம ‘தல’ தோனிதான். 2007-ல் ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஐசிசி உலகக் கோப்பை, 2013-ல் ஐசிசி சாம்பியன் டிராபி என மூன்று கோப்பைகளையும் தட்டிக்கொண்டுவந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close