[X] Close

68 நாட்களில் விமானத்தில் உலகைச் சுற்றிவந்த சீன மனிதர்: கடும்பனியில் ஆபத்தான சாகச அனுபவங்கள்


68

  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 13:09 pm
  • அ+ அ-

-பிடிஐ

57 வயது மிக்க சீன மனிதர் ஒருவர் 68 நாட்களில் 50 நிறுத்தங்களுடன் இரண்டாவது முறையாக உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடும் குளிரின் ஊடே  இவரது பயண அனுபவங்கள் ஆபத்தான சாகசம் நிறைந்ததாக அமைந்துள்ளன.

இதுகுறித்து குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

ஷாங் போ, இவர் கடந்த ஏப்ரல் 2 அன்று சிகாகோ விமான தளத்திலிருந்து புறப்பட்டு மூன்று கண்டங்களில் 21 நாடுகள், மூன்றுக்கும் மேற்பட்ட பெருங்கடல்களை மொத்தம் 41 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து நேற்று காலை புறப்பட்ட அதே இடத்தில் வந்து இறங்கினார்.

ஷாங் போ, தரை இறங்கும் முன் அச்சிறிய விமான நிலையத்தில் மிகவும் தாழ்வாக நான்குமுறை வட்டமடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

ஏற்கெனவே, இவர் கடந்த 2016இல் ஆகஸ்ட் 7 இதே போன்று ஒரு பயணத்தை தொடங்கி உலகை வலம் வந்தார். அவரது முதல் பயணத்தின்போது புரொபெல்லர் டிரைவன் வகை விமானத்தில் சுற்றிவந்தார். 49 நாட்களில் உலகம் சுற்றிவந்தபின் அவர் செப்டம்பர் 24 அன்று பத்திரமாக தரையிறங்கினார்.

ஷாங் தனது இரண்டாவது உலக விமான பயணத்தில் அவர் சந்தித்த சவால்களை முதல் விட கடினமாக இருந்தது என்றார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் பறந்துசென்ற விமானத்தில் பிஸ்டன் உந்துதல் மற்றும் அழுத்தத்திற்கான கேபினும் இல்லை. ஓரளவுக்கான உயரத்தில் மட்டும் பறப்பதற்குண்டான ஆற்றலை மிகவும் குறைவாக கொண்ட ஒரு விமானம் ஆகும். நான் முதன்முதலாக உலகை சுற்றிவந்தபோது எதிர்கொண்டதைவிட அதிக சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்பயணத்தில் மிகவும் கடினமானது எது என்றால் ஆர்டிக் துருவப் பகுதிகளில்  பறந்து சென்றதுதான். சிகாகோவிலிருந்து புறப்பட்ட பிறகு, நான் நேரடியாக வடதுருவத்தின் ஆர்டிக் வட்டத்திற்குள் நுழைந்துவிட்டேன். ஏப்ரல் வரைக்கும்கூட அங்கு கடும் குளிர் இருந்துகொண்டிருந்தது. அங்கு தரையில் உள்ள வெப்பநிலையே மைனஸ் 20 செல்சியஸ் டிகிரி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்பகுதிகளில் நான் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துசென்றேன். அங்கே இருந்த வெப்பநிலை மைனஸ் 50 செல்சியஸ் ஆகும். சிறியவகை டிஏ42 விமானத்தில் ஏர் கண்டிஷனிங் பொருத்தப்படும் முறையில்லை.

இதனால் சாங் தன்னை ஒரு சூடாக வைத்துக்கொள்ள கடற்படை வீரர்கள் நீருக்கடியில் நீந்திச்செல்ல அணியும் இம்மர்சன் சூட் எனப்படும் சிறப்பு ஆடையை அணிந்துகொள்ள வேண்டியிருந்தது.

கிரீன்லாந்து பகுதியிலிருந்து ஐஸ்லாந்து பகுதிக்குச் செல்ல வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதையும் கடந்து வானில் பறந்துசெல்லும்போது, முகத்தை நோக்கி அடித்துக்கொண்டிருந்த கடுமையான எதிர்க்காற்றை நான் எதிர்கொண்டேன். இதனால் விமானத்தின்வேகம் 110 முதல் 120 கிலோ மீட்டர் வரை வீழ்ச்சிடையந்தது.

அட்லாண்டிக் பெருங்கடலின்மீது செல்லும்போது காற்று பலமாக அடித்ததால் அன்றைய தினம் வேறு வழியின்றி நான் விமானத்தை திருப்பி கிரீன்லாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கிராவல் விமான தளத்தில் தரையிறங்கினேன். ''

இவ்வாறு தனது பயண அனுபவங்களைப் பற்றி ஷாங் போ தெரிவித்தார்.

சிகாகோ விமான தளத்தில் ஷாங் போவின் விமானம் தரையிறங்கிய பின், போவுக்கு இரு நிமிட உடல் பரிசோதனைக்காக வெளியே வந்தார். அப்போது அவரது காதுகளிலிருந்து பனி உருகி ஓடிக்கொண்டிருந்தது. மேலும் விமானப் பயணத்தின்போதும் உயர் எண்ணெய் அழுத்தம் எனப்படும் ஒரு சிக்கலையும் அவர் அனுபவித்துள்ளார்.

ஷாங் போ அடுத்து இதேபோன்ற மூன்றாவது உலகப் பயணத்திற்கும் திட்டங்களை தொடங்கிவிட்டார். உலகப் பயணத்தை முழுமையாக நிறைவேற்ற இன்னும் ஆறு பயணங்களுக்கான திட்டங்கள் கைவசம் உள்ளதாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close