[X] Close

நெட்டிசன் நோட்ஸ்: கொலைகாரன் - மீண்டும் பொலிவுடன் விஜய் ஆண்டனி


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 15:49 pm
  • அ+ அ-

அர்ஜுன், விஜய் ஆண்டனி நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'கொலைகாரன்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

PattiKataan

கொலைகாரன் படம் பார்க்க நேர்ந்தது.

ரீசன்டா வந்த 'ராட்சசன்', 'தடம்' வரிசையில் தரமான திரில்லர் மெட்டீரியல். ஹீரோ கடப்பாரைய முழுங்கின மாதிரி விரைப்பாவே திரியுறாரு அர்ஜுனுக்கு ஹீரோவுக்கும் மேலான ரோல். க்ளைமாக்ஸ்ல கதையை ரொம்ப நேர்த்தியா கோர்த்து சொன்ன விதம் வாவ் வாட்டே     .

Raju N

ஒரு நாவலோட கதையை 9 பேரு அடிச்சா, இப்பிடித்தான் இருக்கும் போல!பாபநாசத்துல ஆகஸ்ட் 2. இதுல பிப்ரவரி 6.   

mohaideen

கொலைகாரன்  படம் மனதைக் கொள்ளை கொண்டகாரன்  விஜய் ஆண்டனி நடிப்பு சூப்பர்

Prakash RJ

இந்த வருடத்தின் மிகச் சிறந்த #Thriller படம் #kolaikaran.

வெகு நாட்கள் கழித்து மீண்டும் பொலிவுடன் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

Cheyyaru Balu

தமிழ் சினிமா எனக்கு நூறு படங்கள் நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி முகத்தை வைத்து கொண்டுதான் நடிப்பேன் என்று ஊர் எல்லையில் சத்தியம் செய்துவிட்டு கிளம்பி இருப்பாரோ விஜய் ஆண்டனி

Jayanthi

விஜய் ஆண்டனி சார் உங்கள் நடிப்பு அருமை. இசை பிரமாதம். திரைக்கதைக்கு அர்ஜுன் மிகப் பெரிய ஆறுதல்.

ameerajmal

சுமாரான த்ரில்லர் படம். முடிவு கணிக்க முடிகிறது.

ஸ்திதபிரக்ஞன்

என் தலைவன் விஜய் ஆண்டனி ஜெயிச்சிட்டான் போல.

பாலா

கொலைகாரன் நல்லாயிருக்கு.

Verrückt Junge

#கொலைகாரன் அருமையான படம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close