[X] Close

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:29 am
  • அ+ அ-

தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் தாக்கம் உயர்ந்து காணப்படுகிறது. மாநிலத்தில் அதிகபட்சம் திருத்தணியில் 105.6 டிகிரி வெப்பநிலை நேற்றுபதிவானது. இதுதவிர திருச்சியில் 105, வேலுாரில் 104, நெல்லையில் 103, மதுரை, சென்னை மீனம்பாக்கத்தில் தலா 102, கரூரில் 101 டிகிரி வெப்பம் பதிவானது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

சேலம், திருப்பூர், ஈரோடு, மதுரை, தேனி, நாமக்கல், வேலூர், நீலகிரி, விருதுநகர், திண்டுக்கல், கோவை உட்பட பெரும்பாலான மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதுதவிர சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலுார், தருமபுரி, நாமக்கல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது. அதேநேரம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், கரூர், திருவண்ணாமலை, திருச்சி,பெரம்பலுார், அரியலுார், நாமக்கல், மதுரை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வரை வெப்பநிலைஉயர்ந்து காணப்படும்.

இதற்கிடையே தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 8-ம் தேதி தொடங்கும்’’என்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் சராசரியைவிட குறைவாகவே பருவமழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close