[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.152 உயர்வு


152

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:29 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.152 உயர்ந்து 24 ஆயிரத்து 928-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 928-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 116-க்கு விற்கப்பட்டது.

இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 97-க்கு விற்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 2 மாதங்களுக்கு பிறகு 22 கேரட் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் தங்கம் விற்பனையில் சிறிய அளவில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close