[X] Close

திருப்பூர், பட்டுக்கோட்டையில் 2 மாணவிகள் தற்கொலை: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் துயர முடிவு எடுத்ததாக பெற்றோர் வேதனை


2

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:13 am
  • அ+ அ-

நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், ராஜலட்சுமி தம்பதி, திருப்பூர் வெள்ளியங்காட்டில் தங்கி, பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களது மகள் ரிதுஸ்ரீ(18), பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண் பெற்று, கோவையில் நீட் தேர்வு எழுதினார். நேற்று அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளில் 68 மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவர், நேற்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டுமருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாநகர போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பெற்றோர் கூறும்போது, ‘மருத்துவத் துறையில் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். தேர்வு முடிவை அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். மகளின் முடிவுக்கு வேறு காரணம் இல்லை' என்றனர்.

பட்டுக்கோட்டை மாணவிபட்டுக்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்த நம்பிராஜ்(44) மீன்பிடி படகுகளை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார்.

இவரது மகள் வைஷ்யா(17).பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வை எழுதினார். நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளைப் பார்த்த வைஷ்யா, போதுமான மதிப்பெண் பெறாததை அடுத்து மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அலறியபடி தீக்காயங்களுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். நீட் தேர்வில் வைஷ்யா குறைந்த மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close