[X] Close

ஐஓசி செயல் இயக்குநராக ஜெயதேவன் பொறுப்பேற்பு


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 09:11 am
  • அ+ அ-

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில செயல் இயக்குநராக இருந்த ஆர்.சித்தார்த்தன் ஓய்வு பெற்றதை அடுத்து ஜெயதேவன் பதவியேற்றுள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆயில் இன்டஸ்ட்ரி மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.

அடிப்படையில் சிவில்இன்ஜினீயரான ஜெயதேவன், ஸ்லோவேனியா நாட்டு பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் மேனேஜ்மென்ட் துறையில் எம்பிஏ பட்டம் பெற்றவர். எண்ணெய் துறையில் முக்கியமாக எல்பிஜி துறையின் செயல்பாடுகள், பொறியியல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.

ஆதார் அடிப்படையில் மானியத்தை நேரடியாக மாற்றம் செய்யும் திட்டத்தில் இவரது பங்களிப்புக்காக, பிரதம மந்திரியின் ‘ஆதார் எக்செலன்ஸ் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.l

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close