[X] Close

’என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..!’


yen-uyirinum-melana

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Jun, 2018 13:58 pm
  • அ+ அ-

மீண்டும் ஒலிக்கட்டும் அந்தச் சூரியக்குரல்!  

கடந்த எழுபது ஆண்டுகளாக, அவரின் பெயரை ஒருநாளில் ஒருமுறையேனும் தமிழகத்தில் உச்சரித்துவிடுவார்கள். அவர் பற்றிய செய்தியோ கட்டுரையோ கடிதமோ கேள்வி பதில் பாணி பேட்டியோ, அறிக்கையோ இடம்பெறாமல் இருந்ததே இல்லை. அவர்... கலைஞர் மு.கருணாநிதி.

தமிழக அரசியல் சக்கரத்தின் நடுப்பாகம் இவர்தான். இவரைச் சுற்றியே எப்போது அரசியல் சூழல்கள் இருக்கும். தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு சின்ன அசம்பாவிதமோ பிரச்சினையோ நடந்தால், அதை தன் கேள்விக்கணைகள் மூலம் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எடுத்துரைப்பதும் இடித்துரைப்பதும் கலைஞரின் தனி அரசியல்.

எத்தனை மணிக்கு மீட்டிங் தொடங்கினால் கூட்டம் வரும். எத்தனை மணிக்கு மீட்டிங் முடிந்தால், பத்திரிகையாளர்கள் அவர்கள் அலுவலகம் சென்று, நியூஸ் போடமுடியும் என்பதெல்லாம் அவர் போடுகிற துல்லிய அளவீடு. மாலை பேப்பருக்கு ஒரு செய்தி, மறுநாள் பேப்பருக்கு ஒரு அறிக்கை என உழைப்பையே சுவாசமாகக் கொண்டவர் கலைஞர். எழுதுவதையே மூச்சாகக் கொண்டவர் அவர். பேசுவதையே உயிராகக் கொண்டவர் கருணாநிதி.

போராட்டங்களுக்கு அஞ்சாத கட்சி திமுக. அதன் தலைவரின் வீரியம் அப்படி. தோல்விகளைக் கண்டு துவளாதவர் கலைஞர். தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த போதும், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கட்சியை எந்த செய்கூலியும் சேதாரமும் இல்லாமல், கூடு கலையாமல் பொத்திக் காத்த நிர்வாகத் திறன், கலைஞருக்கு மட்டுமே உண்டான ஸ்பெஷல்.

எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். எவ்வளவு பேர் வேண்டுமானாலும் கேட்டு மடக்கலாம். ஆனால் கேள்விகளை முடிக்கும் அந்தத் தருணத்தில் பதில் சொல்லும் சாதுர்யமும் அந்தக் கேள்வியைக் கொண்டெ எதிர்க்கேள்வி போடுவார் கலைஞர்.

நகைச்சுவை கலந்த பேச்சு, நற்றமிழ் தோய்ந்த பேச்சு, இலக்கியம் சார்ந்த அறிவு, அரசியலின் அரசியலையும் அறிந்துணர்ந்த புத்திசாலித்தனம், வியூகங்கள் அமைக்கும் விசால குணம், எதிர்த்தோரையும் அரவணைக்கும் சாதுர்யம், எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின், கட்சியின் அந்த ஊரில் உள்ள ஆரம்பகர்த்தா முதல் புதிதாக சேர்ந்தவர்கள் வரை அனைவர் பெயரையும் ஞாபக டைரியில் குறித்து வைக்கிற கூர்ந்த புத்தி... என கலைஞரின் தனித்துவம், மகத்துவம் கொண்டது!

— KalaignarKarunanidhi (@kalaignar89) May 24, 2015

மேடையில் அமர்ந்தவர், எழுந்து, நடந்து, மைக்கின் முன்னே நின்று, பேசத் தொடங்கினால், என்ன பேசுவார், எந்த அரசியலை எடுத்துவைப்பார் என்று யோசிப்பதற்கு முன்னாலே ‘அதை எப்போது சொல்லுவார்’ என்று எல்லோரும் காத்திருப்பார்கள். அந்த ஒற்றைச் சொல்... உசுப்பிவிடும். கரவொலி எழுப்பும். தலைவா என்று அலறச் செய்யும். டாக்டர் கலைஞர் என்று கோஷமிடும். தமிழினத்தலைவர் என்று போற்றிக் கொண்டாடுவார்கள். ஒரு சொல் மகத்துவம் இது. சொல்லின் மகத்துவம் அது. சொல்லப்படுபவரின் மகத்துவமும் அதுவே!

அந்தச் சொல்... ’என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’

அந்தக் கரகர குரல், தமிழனின் செவியில் நுழைந்து என்னவோ செய்யும். காந்தமென ஈர்க்கும். அப்படியொரு குரலும் சொல்லும் பேச்சுமான ஆற்றல் மிக்க முதுபெரும் தலைவர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். 95வது பிறந்தநாள்.

இன்றைக்கு சமூகவலைதளங்களில் குவிந்துகொண்டிருக்கின்றன வாழ்த்துப் பூங்கொத்துகள்! அந்தப் பூக்களெல்லாம் கலைஞரைப் பார்த்து, அவரின் உதட்டசைவு தருணத்துக்காக ஏங்கிக் கிடக்கின்றன.

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’

இதோ... இது எப்போதோ அவர் சொன்ன குரல். எப்போதும் கேட்க வேண்டுமே, சொல்லவேண்டுமே எனும் எதிர்பார்ப்புகொண்ட குரல்... கரகர குரல்.

அந்தக் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதுதான் தமிழர்களின், திமுகவினரின் எதிர்பார்ப்பு.

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று அவர் ஒரேயொரு முறை சொல்லிவிட்டால் போதும்... இன்னொரு சூரிய விடியல்... உதய சூரிய எழுச்சி என்று கொண்டாடுவான், உடன்பிறப்பு!

கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close