[X] Close

ஞெகிழி பூதம் 16: கடலில் மிதக்கும் பெருங்குப்பை


16

  • kamadenu
  • Posted: 18 May, 2019 12:20 pm
  • அ+ அ-

-கிருஷ்ணன் சுப்ரமணியன்

கடலுக்குள் ஆண்டுதோறும் 80 லட்சம் டன் குப்பையைக் கொட்டுகிறோம். இந்தக் கணக்கை நாம் குறைக்கவில்லை என்றால், 2025-ம் ஆண்டுக்குள் மூன்று கிலோ மீன் பிடித்தால் அதில் ஒரு கிலோ ஞெகிழிக் குப்பைதான் இருக்குமாம். கப்பல், கடற்கரை, ஆற்றங்கரை என்று கடலுக்குள் குப்பை செல்லப் பல வழிகள் உள்ளன.  கடலில் இருக்கும் குப்பையில் 80% நிலத்தில் உருவானதே. ஆகவே, நாம் தூக்கி எறிந்ததுதான் நமக்குத் திருப்பி வருகிறது.

தூக்கி எறிவது மக்கக்கூடிய குப்பையாக இருந்தால், தாவரங்கள், பயிருக்கு உரமாகி ஒரு அருமையான கனியாக நமக்குத் திருப்பிக் கிடைக்கலாம். அதுவே மக்காத ஞெகிழியாக இருந்தால், அது ஞெகிழியாகவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்.

என்ன செய்யலாம்?

ஞெகிழிக் குப்பையைச் சேர்க்க கடலுக்குள் குப்பைத் தொட்டி வைக்கலாம், ராக்கெட்டில் ஏற்றி சூரியனின் வெப்பத்தில் குப்பையைக் கரைத்துவிடலாம் என்று சிலர் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால், அதெல்லாம் குப்பையை மேலும் மேலும் அதிகரித்துவிட்டு, அழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் முயற்சிகளே. அவர்கள் முயற்சி ஒருபுறம் இருக்க, நாம் ஒன்று செய்வோம்.

“ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்களைத் தவிர்ப்போம். மற்ற ஞெகிழிப் பொருட்களைச் சேகரித்துக் காயலாங் கடைக்காரரிடம் மறுசுழற்சி செய்யக் கொடுப்போம். ஞெகிழிக்கு மாற்றாக நீடித்து உழைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவோம். செயற்கை அல்லாத நல்ல பருத்தி ஆடைகளையே அணிவோம் என்று ஏற்போம்”

- கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close