[X] Close
 

முதலைக்கவிதை ஞாபகம் இருக்கா?


bala-crocidile-kavidhai

  • வி.ராம்ஜி
  • Posted: 29 May, 2018 10:33 am
  • அ+ அ-

எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ஆரம்பம் கவிதைகள்தான். டெலிபோன் துடைப்பவள் என்பதுதான் முதல் கவிதை. அடுத்தடுத்து ஏராளமான கவிதைகள் எழுதினார். அதையடுத்து சிறுகதைகள், நாவல்கள் என எழுதத் தொடங்கி, புதுப்பாய்ச்சல் காட்டினார்.

ஆனாலும் அவரின் கவிதை மனசு, அவ்வப்போது எங்கேனும் வந்துகொண்டுதான் இருந்தது. பச்சைவயல் மனது, இரும்புகுதிரைகளின் குதிரைக்கவிதை என்பதெல்லாம் வெகு பிரபலம். அதேபோல், கரையோர முதலைகள் நாவலையும் ஸ்வப்னாவையும் தியாகுவையும் மறக்கவே முடியாது.

குறிப்பாக, அதில் வரும் முதலைக்கவிதை.

இதோ... முதலைக் கவிதை.

மரம் செடி இலைகள் போல

மண் வாழும் உயிர்கள் போல

மூச்சுவிடத் தெரிந்த முதலை

நீருக்குள் எதற்காய்ப் போச்சு

கூடுகள் குகைகள் இன்றி

நீரடியில் உறங்கலாச்சு.

நரிக்குகையில் சிங்கம் மோதும்

குயில் முட்டை காக்கைக் கூட்டில்

காக்கைகள்? மனிதர் வீட்டில்

புற்றுமண் எறும்பு கட்ட

பாம்புக்கு அதுவே கட்டில்

உன் சுவர் எனது வீட்டில்

என் கலப்பை உனது வரப்பில்

அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும்

எண்ணமே முதலைக்கில்லை.

நீரடி எல்லாம் இங்கே

பூமித்தாய் கருப்பைப் போல

எல்லைகள் இல்லா தேசம்

திசை கூட அழியும் ஆங்கே

மனிதர்கள் பிரித்துப் போட்ட

நிலம் பார்த்து சோகத்தோடு

அழுவதே முதலைக்கண்ணீர்

தெரிந்தபின் குறை சொல்லாதீர்!

 

எழுத்தாளர் பாலகுமாரன் தொடர்பான கட்டுரைகளைப் படிக்க...

பாலகுமாரன் பற்றி கமல்! எழுத்தில் ஸின்ஸியாரிட்டி! 

விடைபெறுகிறேன்..! எழுத்துச் சித்தரின் இறுதி நிமிடங்கள்

’பாலா... ஒரு தலைமுறையே உனக்கு கடன்பட்டிருக்கிறது’

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close