[X] Close

ஆப்பிள் சிவப்பு என் பேத்தி... பாலகுமாரனின் கவிதை


bala-kavidhai

  • வி.ராம்ஜி
  • Posted: 28 May, 2018 12:30 pm
  • அ+ அ-

ஆரம்பகாலத்தில், வானொலியின் இளைய பாரதம் நிகழ்ச்சியில், எழுத்துச்சித்தர் பாலகுமாரன் வாசித்த புகழ்மிக்க கவிதை இது. இந்தக் கவிதைக்கு அப்போதே ஏகப்பட்ட வரவேற்புகள். வாசகர்கள் மட்டுமின்றி இன்றைய பிரபலங்கள் பலரும் கூட, இந்தக் கவிதையை மனனமாகச் சொல்லுவார்கள்.

அந்தக் கவிதை இதோ... 

கொத்திக்கொண்டு போவாண்டி

ஆப்பிள் சிவப்பு என் பேத்தி

பாட்டி சொன்னாள் திடத்தோடே

அம்மா விடுவாள் பெருமூச்சு

வெட்டிப் பொழுது கழிப்பானேன்

வேலை தேடேன் எங்கேனும்

அப்பா சொல்வார் தரை நோக்கி

அண்ணன் முறைப்பான் எனைப் பார்த்து

கொத்திக்கொண்டு போவதற்கு

ஜாதகப் பட்சி வரவில்லை

வெட்டிப் பொழுதின் விடிவுக்கும்

வேளை வரலை இதுநாளாய்

வேலை தேடி கால் தேய

வெளியே நடக்கத் தலைப்பட்டால்

ஈயாய் கண்கள் பல மொய்க்க

என்னை உணர்ந்தேன் தெரு மலமாய்!

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close