[X] Close

ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: நாளைய அம்பேத்கர்களே!


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:25 am
  • அ+ அ-

-சாதனா

சட்டப் படிப்பைச் சிறப்பாகப் பயில விரும்பும் மாணவர்களுக்கு ‘ஜி.வி.வி. மெமோரியல் ஸ்காலர்ஷிப் 2019’ திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்குகிறது ஜி.இ.வி. உதவித்தொகை நிதி அறக்கட்டளை.

நிதி உதவி மட்டுமின்றித் தலைமைப் பண்புப் பயிற்சியையும் வழிகாட்டுதல் முகாமையும் இளம் அம்பேத்கர்களுக்கு இந்த அமைப்பு வழங்கவிருக்கிறது. இந்தியாவின் 13-வது தலைமை வழக்கறிஞரான முனைவர் கூலம் வஹன்வதியின் நினைவாக நிறுவப்பட்ட அறக்கட்டளை இது.

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரியில் இளநிலை அல்லது முதுநிலை சட்டப் படிப்பைப் படித்துவரும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்களைத் தவிர CLAT/ LSAT – இந்தியா/ AILET அல்லது ஏதேனும் ஒரு சட்ட நுழைவுத் தேர்வை 2019-ல் எழுதிய/ எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நடைமுறை அறிவு பெற

இந்த உதவித் தொகைக்குத் தேர்வாகும் மாணவர்களின் கல்விக் கட்டணம், இதரப் படிப்புச் செலவுக்கென ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம்வரை வழங்கப்படும். சட்டப் படிப்பில் வெளிப்படுத்தும் திறனைப் பொறுத்து மேற்கொண்டு உதவித்தொகை நீட்டிக்கப்படும். தகுதி வாய்ந்த மாணவர்கள் http://www.b4s.in/vetrikodi/GMM2 இணையச் சுட்டியின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதி

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:  31 மே 2019.

31 மே 2019-க்குப் பிறகு சட்ட நுழைவுத் தேர்வு எழுதிவிருப்பவர்கள் மட்டும் 31 ஆகஸ்ட் 2019 வரை விண்ணப்பிக்கலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close