[X] Close

நெட்டிசன் நோட்ஸ்: சிஎஸ்கே வெற்றிக்காக ரத்தக் காயத்துடன் ஆடிய வாட்சன் - ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:09 am
  • அ+ அ-

காலில் ரத்தக் காயத்துடன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவை வெற்றியின் அருகில் கொண்டு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அவற்றில் சில பதிவுகள் இன்றைய  நெட்டிசன் நோட்ஸில்...

 

ARUN KUMAR

வாட்சன் எனக்கு தெரிஞ்சு ஒரு ஆஸ்திரேலியன் பிளேயர்... நான் இவளோ ஃபீல் பண்ணாதே இல்ல.

கப் ஜெயிக்கிறது அடுத்தபட்சம். ஆனா உன்னோட உயிரை குடுத்து ஆடுன பாத்தியா. உண்மையாவே நீ தான்யா ரியல் சாம்பியன்.

என்னிக்கும் CSK ஃபேன்ஸ் மனசுல உனக்குன்னு ஒரு பெரிய இடம் கண்டிப்பா இருக்கு வாட்சன்.

பிரபாகர்சுப்பிரமணியம்

‏ #WattoMan இதைக் கூடப் பாக்காம என்னத்த மேட்ச பாத்தனோ தெரியல. வாட்சன் ஜீ நீ கெத்து தல கமென்ட்ரி பாக்ஸ்ல கூட இத கவனிக்கல ..  

Ajithkumar

போராடி தான் தோத்துருக்கோம்னு நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருந்தது  

@ShaneRWatson33 மனுஷன் இந்த நிலைமையிலயும் மனம் தளராம ஆடுன விதத்தை நினைக்கும் போது பெருமையா இருக்கு லவ் யூ வாட்சன்   ❤️

AR Bharaty

சில கதவுகள் திறக்காத போதும் உனக்கான வழி கிடைக்கும்! வெற்றியை நோக்கிச் செல்லும்போது விழும் ஒவ்வொருதுளி வியர்வையும் உன் உழைப்பைச் சொல்லும்!

அந்த உழைப்புக்காக நீ  சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் உனக்குப் பின் உழைப்பவர்களுக்கு உன் கதை சொல்லும்!    

#CSK வின் வாட்சன்!

Ramana Thala Dhoni

ஊருக்காக சண்டை போட்டு ரத்தம் சிந்திருக்காப்ல. சிந்துன ரத்தத்துக்கு சொந்தம் வராமலா போயிருவோம் !

தோனி வாட்சன் மேல வச்ச நம்பிக்கைக்கு  வாட்சனோட விஸ்வாசம். 

Riyan Chinnaa ®

அடேய்.. வாட்சன்         

மரத்தோட வேர்ல உயிர் இருந்துச்சுன்னு.. நிரூபிச்சுடையேடா..

Hats off.. And Miss U.

ℳsᴅ பிளேடு

வாட்சன் சிந்திய ரத்தம் விழுந்தது மண்ணில் உரமாய் அல்ல விதையாய் விருட்சமாவோம் 2020 ஐபிஎல்லில்.

Thalapathy

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்

தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்..

Anniyan Memes ツ

‏யோவ் வாட்சன் நேத்து முடியாதோட எங்ககூட எப்படி விளையாடியிருக்க வேதனையா இருந்தாலும் பெருமையா இருக்கு.

 

nbvf.jpg 

 

AnaND 2.O

‏நேத்து தோத்துபோனப்ப கூட  மனசு ஏத்துக்கிச்சு. ஆனா, வாட்சன் பட்ட கஷ்டம்லாம் பார்க்கும் போது தான் தோத்துட்டுமேன்னு இன்னைக்கு கஷ்டமா இருக்கு...

ஜெய்ச்சு IPL ட்ராபி வாங்கி வாட்சன் கைல கொடுத்திருந்தா மனுஷன் எவ்ளோ சந்தோஷப்பட்டிருப்பாரு.

டேவிட் தமிழ்

சென்னை தோற்றபோது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இது எங்களுக்கு ஒன்றும் புதிது அல்ல .

ஆனால் வாட்சனின் இந்த அர்ப்பணிப்பைப் பார்க்கும்போது வென்று, வாட்சனைக் கொண்டாடி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

வீடியோ 

 

VerithanaM

உன்ன ஃபார்ம் அவுட்னு சொல்லி ப்ளேயிங் லெவன விட்டு தூக்கச் சொன்ன இந்த வாய்ல அடி டா..

உன்னைத் திட்டி ட்வீட் போட்ட இந்த கைல அடி டா...

@ShaneRWatson33

 

wa.jpg 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close