[X] Close

வெயில் மட்டும் ஜாஸ்தியா இல்லைனா!


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:01 am
  • அ+ அ-

-சாதனா

சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பிலிருந்து தப்பிக்கக் குளுகுளு ஏசி அறைக்குள்ளே பதுங்கியபடி ஜில்லுனு பானங்களைக் குடிச்சுக்கிடே இருக்கத் தோணுது இல்லையா! கூடவே எரும சாணியின், ‘சம்மர் ஸ்பூஃப்’-ஐயும் பார்த்தால் கொஞ்சம் கூலாகிவிடுவீர்கள்.

ஏற்கெனவே வெளிவந்த திரைப்படங்களின் காட்சிகளை அப்படியே ‘இமிடேட்’ செய்வதன் மூலமாகப் பகடி செய்யும் ‘ஸ்பூஃப்’ பாணியில் கோடைகாலத்தின் தாக்கத்தை கண்முன்னே ஜாலியாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘96’, ‘பேட்ட’, செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என சரமாரியாகக் கலாய்த்திருக்கிறார்கள்.

‘அடிக்கிற வெயிலில ஸ்வட்டர்’ போட்டு நடுத்தெருவில் எருமை சாணி விஜய்  உட்கார்ந்திருக்க ‘பேட்ட’ படத்தை கேலி செய்து ‘காளி’ ரசிகர்களை கொலை காண்டாக்கியிருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் ஸ்பூஃப்தான் ‘ஹைலட்’.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஜானுவை ராம் தேடிவரும் கிளாஸிக் காட்சி இதில் தாறுமாறாகக் கலாய்த்திருக்கிறார்கள். இருவருமே எதிரெதிரே நின்றாலும் வெயிலுக்கு பயந்து இணைய மறுக்கிறார்கள். “அன்னைக்கு வெயில் மட்டும் ஜாஸ்தியா இல்லைனா என் லவ் ஜெய்சிருக்கும்” என்ற ராமின் வசனத்தை எருமை சாணி விஜய் சொல்லும்போது முடியல பாஸ்!

‘சம்மர் ஸ்பூஃப்' காண இணையச் சுட்டி: https://bit.ly/2VszyVe

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close