[X] Close

ஜெர்மனியில் உதயமாகும் மின்சார சாலை


  • kamadenu
  • Posted: 13 May, 2019 10:52 am
  • அ+ அ-

சரக்கு லாரிகள் ஒரு நாட்டின் தரைவழி வணிகத்தின் குறியீடு. ஜெர்மன் தற்போது தன் நாட்டில் இயங்கும் சரக்கு லாரிகளுக்கென பிரத்யேக சாலையொன்றை உருவாக்கியிருக்கிறது.

வேறொன்றும் இல்லை, நம் ஊரில் இயங்கும் மின்சார ரயில் போன்று தான். என்ன வித்தியாசம் என்றால், ரயில் பாதைக்கு பதிலாக சாலையிலேயே மின்சார கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது 10 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த மின்சார சாலையை உருவாக்கி இருக்கிறது. இதன் பயன்பாடு என்னவென்றால், இந்த சாலையின் வழியாக சரக்கு லாரிகள் செல்லும்போது, லாரியின் மேற்புறம் இருக்கும் மின் கடத்தி சாலையில் உள்ள மின்சார கம்பிகளுடன் இணைப்பை உருவாக்கிக் கொள்ளும்.

அப்போது லாரிக்கு தேவையான ஆற்றல் அந்த மின்சாரம் வழியே சார்ஜ் செய்யப்பட்டுவிடும். இதனால் எரிபொருள் பயன்பாடு குறைக்கப்படுவது மட்டுமல்லாமல் வாகனப் புகையால் ஏற்படும் மாசும் கட்டுப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யப்படும் வாகனங்கள் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். சுவாரஸ்யம் என்னவென்றால் இதைப் போன்ற நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பயணிகள் பேருந்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close