[X] Close

அவெஞ்சரின் புதிய அவதாரம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 10:46 am
  • அ+ அ-

பஜாஜ் நிறுவனம் அவெஞ்சரின் புதிய மாடலான அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160– ஐ அறிமுகப்படுத்தியிருக் கிறது. ஒரு லட்சத்திற்கு குறைவான விலையில் க்ரூயிசர் மாடல் பைக் வாங்க விரும்புவர்களின் தேர்வாக அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எல்இடி டிஆரெல் முகப்பு விளக்கு, அலாய் வீல் என புது அம்சங்களுடனும் களமிறங்கி இருக்கிறது.

இதன் 160 சிசி என்ஜின் 15 பிஎஸ் பவரை 8500 ஆர்பிஎம் ஆற்றலுடன் வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஹாண்டில் பாரின் வடிவமைப்பு சாகச உணர்வை தரக்கூடியதாக அமையலாம்.

அதேசமயம் மைலேஜ் லிட்டருக்கு 48 கிலோ மீட்டர் வரை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. பைக் ஸ்டைலாகவும் இருக்க வேண்டும் மைலேஜும் தர வேண்டும் என விரும்புபவர்களின் தேர்வாக இந்த அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 மாடல் அமையலாம். இதன் விற்பனையக விலை ரூ.82,253 எனக் கூறப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகள் அதிகம் விற்பனையாகும் தற்போதைய சூழலில் ஒவ்வொரு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமும் ஸ்போர்ட்ஸ் வகை பைக் தயாரிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் பல்ஸரும், அவெஞ்சரும் பஜாஜின் முகங்கள். அந்த வகையில் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 என்ன தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தப் போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close