[X] Close

கிரிக்கெட்டா? என் மகள்கள் விளையாடுவதா? நோ.. நோ: ஷாகித் அஃப்ரீடியின்  ‘பிற்போக்கு’மன நிலையை சாடும் நெட்டிசன்கள்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 17:22 pm
  • அ+ அ-

கேம் சேஞ்சர் என்ற புத்தகத்தை எந்த நேரத்தில் ஷாகித் அஃப்ரீடி எழுதினாரோ அதிலிருந்து சில பகுதிகளை எடுத்து வெளியிட்டு அவரைப் போட்டு அனைவரும் தாக்கி வருவது அன்றாடச் செய்தியாகி விட்டது.

 

முதலில் தன் வயதைப்பற்றிய உண்மையைக் கூறி தானும் மாட்டிக் கொண்டதோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் வம்பில் மாட்டி விட்டுள்ளார், அடுத்ததாக கம்பீரிடம் வம்பு செய்தார், உள்நாட்டு வீரர்களிடம் வம்பு இழுத்தார், தான் ஆடும் காலத்தில் மூத்த வீரர்கள் தன்னை எப்படி அவமானப்படுத்தினர் என்று ஜாவேத் மியாதாத் உட்பட யாரையும் விட்டு வைக்காமல் வரண்டைக்கு இழுத்தார்.

 

இம்முறை மகளிர் கிரிக்கெட் உலக அளவில் அடுத்த பெரிய விளையாட்டாக வரும் வேளையில் ‘தன் மகள்கள் கிரிக்கெட் ஆடுவதை மட்டுமல்ல வெளியில் சென்று ஆடும் எந்த ஒரு கேமையும் அனுமதிக்க முடியாது’ என்று முடிவை எடுத்துள்ளது பரவலான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

 

அவர் தனது கேம் சேஞ்சர் என்ற புத்தகத்தில், “பெண்ணிய விமர்சகர்கள் என் மகள் பற்றிய என் இந்த முடிவைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறி கொள்ளட்டும் அது பற்றி கவலையில்லை” என்று தெரிவித்து தன்னை நியாயப்படுத்திக் கொண்டுள்ளார் அஃப்ரீடி.

 

அப்ரீடிக்கு 4 மகள்கள், அனைவரும் விளையாட்டில் கெட்டி என்று கூறப்படுகிறது, ஆனால் வெளியில் சென்று விளையாடுவதற்கு அப்ரீடி இவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

 

“அவர்கள் வீட்டுக்குள், வெளியில் அல்லாமல் இண்டோர் கேம்கள் எதை வேண்டுமானாலும் ஆடலாம் நான் அனுமதிப்பேன். ஆனால் பொதுவெளி ஆட்டங்களுக்கு என் பெண்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டேன். கிரிக்கெட்டா? சான்சே இல்லை.

 

இதனையடுத்து சமூகவலைத்தளத்தில் இவரது முடிவை ‘பிற்போக்கு’ என்று வர்ணித்து பலரும் திட்டி வருகிறார்கள்.

 

ஒருவர், “ஷாகித் அஃப்ரீடி ஒரு நடுவயது சராசரி பாகிஸ்தானியர், இவர் வேறு எந்த ஒருவர் மகள்களுடனும் செல்வார், ஆனால் தன் மகள்கள் அதைச் செய்தால் அனுமதிக்க மாட்டார்” என்று சாடியுள்ளார்.

 

இன்னொரு ட்விட்டரேட்டி, “உங்கள் மகள்கள் தங்கள் வாழ்க்கையை தேர்வு செய்ய விடாமல் செய்வது பயங்கரமானது. இது நம் மகளிர் கிரிக்கெட் அணியையும் அவமரியாதை செய்வதாக உள்ளது” என்று சாடியுள்ளார்.

 

கேம் சேஞ்சர் மூலம் இன்னும் என்னெல்லாம் அஃப்ரீடியின் ஃபேஸ் சேஞ்ச் ஆகுமோ தெரியவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close