[X] Close

தூரிகை மொழி: நிஜமும் நிழலும்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:27 am
  • அ+ அ-

-அன்பு

ஒளிப்படங்களைவிட அவற்றை வைத்து அசலுக்கு நிகராக வரையப்படும் ஓவியங்களுக்கே வரவேற்பு அதிகம். அதைப் புரிந்துகொண்டதால்தானோ என்னவோ எந்தப் படத்தைக் கொடுத்தாலும் portrait ஓவியமாக்கி வியக்கவைக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா.

தந்தையும் ஓவியர் என்பதால் மூன்று வயதிலிருந்தே ஸ்வேதா தூரிகையைப் பிடிக்கத் தொடங்கிவிட்டார். பி.காம். முடித்த ஸ்வேதாவுக்கு ஓவியங்கள் மீதான ஆர்வம் குறையவேயில்லை. அதனால் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்து தற்போது நான்காம் ஆண்டு இளங்கலைக் கவின்கலை படித்துவருகிறார். ஆயில், அக்ரலிக், வாட்டர் கலர், ஆயில் பேஸ்ட்டல், பென்சில் ஷேடிங் உள்ளிட்ட பலவிதமான பாணிகளில் வரைகிறார்.

ce8c63a2_P_225684_2_mr.jpg 

மூன்று மந்திரங்கள்

பல்வேறு ஓவியப் போட்டிகளில் பங்கேற்றுவரும் ஸ்வேதா, மாநில அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தைப் பரிசாகப் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். ஸ்வேதாவின் ஓவியத் திறமையைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு ‘கலை இளமணி விருது’ வழங்கியிருக்கிறது. இதுவரை 11 ஓவியக் கண்காட்சிகளைத் தனியாக நடத்தியுள்ளார்.  போர்ட்ரெய்ட் ஓவியங்கள் மட்டுமல்லாது வண்டிகளின் உதிரி பாகங்கள், மறுசுழற்சிக்குப் பயன்படும் பொருட்கள் போன்றவற்றை வைத்து இவர் வரைந்துள்ள ஓவியங்கள் பார்வைக்கு விருந்து படைக்கின்றன. “பள்ளிகளில் ஓவிய வகுப்பைப் பலரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. மற்ற பாடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓவியத்துக்கும் கொடுத்து மாணவர்களின் ஓவிய ஆற்றலை ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார் ஸ்வேதா. 15 வயது முதல் ஓவியப் பயிற்சி அளித்துவரும் ஸ்வேதாவிடம் தற்போது 80 மாணவர்கள் பயிற்சிபெறுகின்றனர். ஓவியத்தில் ஆர்வம் இருந்தும் அதற்கான வசதியில்லாத மாணவர்களுக்கு இவர் கட்டணமில்லாமல் பயிற்சியளிக்கிறார். தமிழகம் மட்டுமல்லாமல் லண்டன், கனடா போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் தான் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்கிறார் ஸ்வேதா. ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை மூன்றும் இருந்தால் விரும்பிய துறையில் சாதிக்க முடியும் என்பதைத் தூரிகை மொழியால் உணர்த்துகிறார் ஸ்வேதா.

ce8c63a2_P_225684_4_mr.jpg

ce8c63a2_P_225684_8_mr.jpg

ce8c63a2_P_225684_9_mr.jpg

ce8c63a2_P_225684_5_mr.jpg

ce8c63a2_P_225684_1_mr.jpg 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close