[X] Close

இந்துஸ்தான் கல்விக்குழுமம் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 10:14 am
  • அ+ அ-

1970-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் கல்விக்குழுமம் (எச்.ஜி.ஐ) ஆட்டொமொபைல் இஞ்சினியரிங் கல்வி அளிப்பதில் முன்னோடியாக விளங்குகிறது. ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் சென்னையில் செயல்பட்டுவரும் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் பல்வேறு கூட்டுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. எச்.ஜி.ஐ ஆட்டொமொபைல் இஞ்சினியரிங் பிரிவில் பல்வேறு புதுமையான பாடத் திட்டங்களையும் வழங்கி வருகிறது.

இந்தியா இன்றைக்கு 40 மில்லியன் வாகனங்களைக் கொண்டிருப்பதோடு, 14.8 டாலர் மதிப்பிலான வாகனங்களையும் ஏற்றுமதி செய்துவருகிறது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகவும் முக்கியமானதாகும். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஆட்டோமொபைல் துறை இன்றைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஜிடிபியில் 4 சதவீதம் பங்களிப்பு செலுத்துவதோடு, 2 லட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்குகிறது.

ஆட்டோமோட்டிவ் உதிரிப் பாகங்கள் ஆய்வுக்கூடம், ஆட்டோமோட்டிவ் எரிபொருள் மற்றும் லூப்ரிகண்ட் ஆய்வுக்கூடம், கம்ப்யூட்டர் எய்டெட் இஞ்சின் மற்றும் சேசிஸ் வடிவமைப்பு ஆய்வுக்கூடம், செயல்பாட்டு சோதனைக்கான இரு மற்றும் மூன்று சக்கர வாகன சோதனை மையம், இஞ்சின் செயல்பாடு மற்றும் எமிஷன் சோதனை ஆய்வுக்கூடம் போன்ற முக்கிய மற்றும் அதிநவீன ஆட்டோமொபைல் ஆய்வுக்கூடங்களைக் குழுமம் பெற்றுள்ளது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மெர்சிடெஸ், பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், போர்ட், போக்ஸ்வோகன் ஆதரவு ஆய்வுக்கூடங்களும் இருக்கின்றன. இவை உலகத்தரமான ஆட்டொமொபைல் துறையை ஏற்படுத்தித் தந்துள்ளன.

பல்வேறு ஆட்டோமோட்டிவ் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வாயிலாக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொழில்முறை பங்கேற்பை குழுமம் ஊக்குவிப்பது முக்கிய அம்சமாகும். இது ஆட்டோமொபைல் துறையில் மாணவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, நவீன போக்குகளையும் அறிமுகம் செய்து கொள்ள பேருதவி புரிவதாக அமைந்துள்ளது.

மேலும், கல்விப் பயிற்சி சார்ந்த நடவடிக்கைகள் தவிர இத்துறை மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி, பயிலரங்குகள், கருத்தரங்குகள் ஆகியவற்றையும் நடத்துகிறது. இதன்மூலம் மாணவர்கள் தொழில் துறைக்கு தயாரான பொறியாளர் ஆவதற்கு தேவையான அனுபவத்தைப் பெறுகின்றனர். கோடை மற்றும் குளிர்க் கால விடுமுறைகளின்போது மாணவர்கள் ஆலைகளில் பயிற்சிப் பெறுவது அவசியமாகும்.

இந்துஸ்தான் குழுமம், போலாரிஸ் ஆப்லோட் பைக் மற்றும் ஆல் டெரைன் விஹிகில் பெற்றுள்ளது, மாணவர்கள் வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொள்வதை ஊக்குவிக்கிறது. பிஎம்டபிள்யு, போர்ட் மற்றும் ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் குழுமம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்நிறுவனங்கள் ஆய்வு நோக்கிற்காக வாகனங்கள் மற்றும் இஞ்சின்களை அளிக்கின்றன.

திறன் வாய்ந்த பணியாளர்களே, புதுமை மற்றும் வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், இத்தகைய பணியாளர்களைப் பெறுவது கடினமானதாகவே இருக்கிறது. 82 சதவீத உற்பத்தியாளர்கள் மிதமான முதல் தீவிரமான பற்றாக்குறையைத் திறன் வாய்ந்த பணியாளர்கள் தேவையில் உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். திறன் வளர்ச்சியில் இருக்கும் இந்த இடைவெளியைப் போக்குவதில் கவனம் செலுத்திவரும் இந்துஸ்தான் குழுமம், ஜெர்மனியின் பாஷ் நிறுவனத்துடன் இணைந்து சென்டர்ஸ் ஆப் எக்ஸலென்சை அமைத்துள்ளது. குழுமத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் தகுந்த திறன் பெற்றிருப்பதை இது உறுதி செய்கிறது.

இந்தக் கல்விக் குழுமத்தின் முன்னணி கல்வி நிறுவனமான இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், உலகம் முழுவதும் இருந்து மாணவர்களை ஈர்க்கும் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தக் கல்வி நிறுவனத்தின் தனித்தன்மைகள்; பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, நிர்வாகம், கலை மற்றும் வடிவமைப்பு, பேஷன், கலை மற்றும் அறிவியல், ஏவியேஷன் என பரந்துபட்ட துறைகளில், அது வழங்கும் சிறப்புப் பிரிவுகள் கொண்ட இளங்கலை படிப்பு, சிறப்பு பிரிவுகள் கொண்ட முதுகலை படிப்பு, பட்டய படிப்புகள், ஆய்வு முதலியனவாகும்.

இந்திய அரசின், நேஷனல் அசெஸ்மண்ட் & அக்ரிடியேஷன் கவுன்சில் (NAAC), எச்.ஐ.டிஎஸ். கல்வி நிறுவனத்திற்கு ‘ஏ’ கிரேடு வழங்கியுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்ப படிப்புகள் ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் பெற்றுள்ளன. யு.ஜிசி. எம்.எச்.ஆர்.டி கல்வி நிறுவனத்தை இரண்டாவது இடத்தில் தர வரிசைபடுத்தியுள்ளன. உலகின் முன்னணி பல்கலைக்கழக ரேங்கிங் அமைப்பான கியுஎஸ் ஸ்டார்ஸ், ஒட்டுமொத்தப் பிரிவில் 3 ஸ்டார் அந்தஸ்து மற்றும் பயிற்றுவிப்பு, புதுமையாக்கம், வேலைவாய்ப்பு அளிக்கும் தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய அம்சம் மற்றும் வசதிகளில் 5 ஸ்டார் அளித்துள்ளது. கியுஎஸ் பிரிக்ஸ் ரேங்கிங் அமைப்பில் கல்வி நிறுவனம் 301-350 பேண்டில் உள்ளது. எம்.எச்.ஆர்.டி.யின் நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்கிங் பிரேம் ஒர்க்கில் 101-150 பேண்டில் உள்ளது. பணியிட நிர்வாக அமைப்பில் 5 எஸ் நிறைவேற்றியதற்காக சான்றிதழை TUV Rheinland சான்றிதழ் பெற்ற முதல் இந்திய கல்வி நிறுவனம் எனும் சிறப்பையும் பெற்றுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close