[X] Close

கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் வானூர்தி பொறியியல் படிப்பு


  • kamadenu
  • Posted: 12 May, 2019 10:08 am
  • அ+ அ-

கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி கடந்த 1998-ஆம் ஆண்டு டாக்டர் கேசிஜி வர்கீ்ஸால் உருவாக்கப்பட்டது. ’ஒவ்வொரு மனிதரையும் வெற்றிபெறும் மனிதராக மாற்ற வேண்டும்; யாருக்கும் தோல்வியே இல்லை’ என்பதை தனது நோக்கமாகக்கொண்டு செயல்பட்டவர் வர்கீஸ். இந்தக் கல்லூரியானது கிறிஸ்துவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் அங்கீகாரத்துடனும் செயல்பட்டு வருகிறது.

கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியானது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கல்வி ஆகியவற்றுக்கு உலக அளவில் பிரசித்திப்பெற்ற கல்வி நிறுவனமாக இன்றைக்கு விளங்கி வருகிறது. இங்கு தரமான கற்பித்தலும், கற்றுக் கொள்ளுதலும், ஆராய்ச்சிகளும் நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான கல்வி அனுபவத்தைப் பெறும் வகையிலும், தலைமைப் பண்பிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு பங்களிப்பை அளிப்பதிலும் அதன்மூலம் நாட்டை கட்டமைக்கும் பணிக்கு உதவி செய்வதிலும் சிறந்து விளங்கச் செய்து வருகிறது.

கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். மேலும், இது ஐ.எஸ்.ஓ., 2001:2015 தரச்சான்று பெற்றதாகும்.

கேசிஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அளிக்கும் பாடப் பிரிவுகளில் முக்கியமான துறை வானூர்தி பொறியியல் துறையாகும்.

இந்தத் துறையைப் பற்றி…

அண்ணா பல்கலைக்கழகத்துடன் நிரந்தர இணைந்த மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற துறையாகும். இந்தத் துறையில் இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பு அளிக்கப்படுகிறது. வானூர்தி வடிவமைப்பு, பராமரிப்பு, விமானப் போக்குவரத்து உட்பட பல்வேறு பிரிவுகள் கற்றுத் தரப்படுகின்றன.

‘வானமே நமது எல்லை’ என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி, வானூர்தி பொறியியல் பாடப் பிரிவானது மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. விமானம் போன்ற பறக்கும் ஊர்திகளை வடிவமைக்கும் அளவுக்கு மாணவர்களின் திறனை வளர்க்கிறது. மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் ஏற்ற ஆசிரியர்களும், நவீனமான ஆய்வக வசதிகளும் உள்ளன.

மேலும், மாணவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டுப் பயன்பெறும் வகையில் கருத்தரங்களும், பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் ஆனந்த் ஜாக்கப் வர்கீஸ் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்கள் கள ஆய்வுக்குச் சென்று, வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களைப் பார்வையிட வழி செய்யப்படுகிறது. டாக்டர் ஆனந்த் ஜாக்கப் வர்கீஸ் இந்திய வானூர்தி சங்கத்தின் சென்னைப் பிரிவு தலைவராக உள்ளார்.

வானூர்தி பொறியியல் துறையானது அந்தத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், திறன் சார்ந்த கல்வியை அளிப்பதாகவும் உள்ளது.

நோக்கம்:

தரமான தொழில்நுட்பக் கல்வியை அளிப்பது மற்றும் தனித்துவமான துறை அனுபவங்களைத் தருவது.

வானூர்தி வடிவமைப்புகளைக் கற்றுத் தருவது, சிக்கலான விஷயங்களை உருவாக்கி அவற்றுக்கு நிரந்தரமான நீடித்த தீர்வுகளைக் காண வழிவகை செய்வது, சர்வதேச அளவிலான வானூர்தி துறையில் உள்ள இப்போதைய நடைமுறைகள், வேலைவாய்ப்புகள் ஆகியன குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைப்பது.

பி.இ., வானூர்தி இளநிலை பொறியியல் பட்டப் படிப்பானது 4 ஆண்டுகள் படிப்பாகும்.

படிப்பை இறுதி செய்யும் மாணவர்கள் கீழ்க்கண்ட நிகழ்வுகளில் சாதனைகள் படைக்கலாம்:-

வானூர்தி பொறியியல் தொடர்பான உயர் படிப்புகளில் மாணவர்கள் தங்களது திறன்களையும், அறிவையும் செலுத்தலாம். மேலும், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாடு போன்றவற்றில் சிறந்து விளங்க முடியும்.

உற்பத்திக்கான சூழ்நிலையை மாணவர்கள் தங்களது திறன்கள் மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அறிவு நிலையைக் கொண்டு உருவாக்க முடியும்.

உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள்: ஆய்வக வசதிகள்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close