[X] Close

உடையும் ரத்தம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 10:46 am
  • அ+ அ-

சர்வேதச தலசீமியா நோய் தினம் மே 8

ரத்தம் உடையும் தன்மையுடைய நோய் தலசீமியா. உலக தலசீமியா நோய் தினம் மே 8 அன்று அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளைப் பிறவியிலேயே இந்த நோய் தாக்குகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவான குழந்தைகளை தலசீமியா நோய் தாக்குகிறது.

இது தொடர்பாக எழும்பூர் அரசுக் குழந்தைகள் நல மருத்துவமனை உதவிப் பேராசிரியர், குருதியியல் நிபுணர், டாக்டர். அருணா இராஜேந்திரன் கூறியதாவது: “ரத்தம் உற்பத்தியாகி மஜ்ஜை வழியாக வெளியே வரும். பொதுவாக ரத்தம் 90 நாட்களில் உடையும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 நாட்களில் ரத்தம் உடைந்துவிடும்.

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாதாமாதம் ரத்தம் ஏற்றாமல் உயிர் வாழ முடியாது. ரத்தம் மாற்றி ஏற்றுவதன் மூலம் குழந்தைகள் ஐம்பது முதல் எழுபது வருடங்கள்வரை உயிர் வாழ முடியும்.

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் பேர் தலசீமியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எழும்பூர் அரசுக் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சராசரியாக மாதத்துக்கு 100 முதல் 125 குழந்தைகள் வருகிறார்கள். தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

குறிப்பாக பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, பாகிஸ்தான் ஆகியவற்றை ஒட்டி வரக்கூடிய பகுதிகளில் தலசீமியா பாதிப்பு அதிகம் உள்ளது.  சிப்ரஸ் நாட்டில் 70 சதவீதத்தினர் தலசீமியாவால் பாதிக்கப்பட்டி ருப்பதால்  அங்கே பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் தலசீமியாவுடன் தான் பிறக்கும்.

பெற்றோர்களுக்கு தலசீமியா இருப்பதை உறுதி செய்தால் குழந்தையைக் கருவிலேயே கலைத்துவிடுவார்கள். தலசீமியாவை எதிர்கொள்ளும் நாடாக சிப்ரஸ் மாறியிருக்கிறது”

அறிகுறிகள்

ஆறு அல்லது எட்டு மாதங்களில் உள்ள குழந்தைகளுக்கு தலசீமியா அறிகுறிகள் தோன்றும். ஆரம்ப நிலையில் ரத்த சோகை என்றுதான் மருத்துவரிடம் வருவார்கள்.

பரிசோதனை

ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரசிஸ் பரிசோதனையின் மூலம் இந்த நோயை உறுதி செய்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனை மிகவும் பாதுகாப்பானது.

சிகிச்சைகள்

வாழ்நாள் முழுதும் தலசீமியா நோய்க்கு ரத்த மாற்று சிகிச்சையைத் தொடர வேண்டும்.

அரசாங்க உதவி

அரசாங்கம் ஒரு குழந்தைக்குக் குறைந்தபட்சம் மாதம் 5,000 ரூபாய் வரையில் வாழ்நாள் முழுவதும் செலவு செய்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசும் ராஜஸ்தான் அரசும் மட்டுமே தலசீமியாவுக்குப் பண ஒதுக்கீடு செய்கிறது.

ஒரு ஆண்டுக்குச் சராசரியாக 12 முதல் 18 யூனிட் ரத்தம் இந்நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்குத் தேவைப்படுகிறது. 18-50 வயதுக்கு உட்பட்டவர்கள் ரத்த தானம் செய்வது இந்த நோயைச் சமாளிக்க உதவும்.

- நவீன் செல்வம்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close