[X] Close

நூல் நோக்கு: அதிகாரத்துக்கும் கலாச்சாரத்துக்குமான உறவு


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:14 am
  • அ+ அ-

-கதிரவன், செ.இளவேனில்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் - கம்யூனிஸம் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. போட்டிக்கு ஆளில்லாத நிலையில் முதலாளித்துவம் தன்னைப் பெருமுதலாளித்துவமாக வளர்த்துக்கொண்டு நிற்கிறது. ஆனாலும், பனிப்போர் காலகட்டத்தின் பதற்றமும் பகைமை உணர்ச்சிகளும் இன்னும் மறைந்துவிடவில்லை. பொருளாதாரக் கோட்பாடுகளின் இடத்தில் மத அடிப்படையிலான கலாச்சாரம் தன்னைப் பொருத்திக்கொண்டு உலக அமைதிக்கு ஊறு விளைவிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 1993-ல் ‘ஃபாரீன் அஃபேர்ஸ்’ இதழில் கட்டுரையாகவும் பின்பு விரிவான நூலாகவும் வெளிவந்துள்ள சாமுவேல் ஹண்டிங்டனின் நாகரிக மோதல் என்ற கருத்தாக்கம், சமகால சர்வதேச அரசியலின் பிரச்சினைகளை சமூக, வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அணுகியுள்ளது. அதிகாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் இடையிலான உறவின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிறது.

 நாகரிகங்களின் மோதல்:

உலக ஒழுங்கின் மறுஆக்கம்

சாமுவேல் பி.ஹண்டிங்டன்

தமிழில்: க.பூரணச்சந்திரன்

அடையாளம் பதிப்பகம்

புத்தாநத்தம், திருச்சி - 621310.

விலை: ரூ.540

 04332 273444

தமிழ் சினிமா மாறியதும் மாறாததும்

எழுத்து, சினிமா, பொது வாழ்க்கை எனக் கால்வைத்த அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த அரிதான ஆளுமை ஜெயகாந்தன். அவரது சிறுகதைகள், நாவல்கள் அளவுக்கு சுவாரசியம் கொண்டவை அவரது கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள், பத்திரிகையுலக அனுபவங்கள் வரிசையில் எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் சரித்திரம், அதன் கலாச்சாரம், பொருளியல் சூழ்நிலைகள், நட்சத்திரப் படாடோபங்களும்கூட. புராணம், தேசியம், திராவிடம் என சினிமா கடந்த கதை இதில் உண்டு. சந்திரபாபு போன்றவர்களுடன் கொண்ட அரிய நட்பின் கதைகளும் உண்டு. தமிழ் சினிமா உலகில் மாறியதும் மாறாததுமான அம்சங்களைத் தெரிந்துகொள்ள இந்நூலைப் படிக்கலாம்.

 ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

ஜெயகாந்தன்

தொகுப்பு: ஜெ.ஜெயசிம்மன் - கா.எழில்முத்து

டிஸ்கவரி புக் பேலஸ்

கே.கே.நகர் மேற்கு, சென்னை-78

விலை: ரூ.300

 8754507070

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close